(1565)

(1565)

எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள்,

கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நின்றாய்,

இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்

நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ!


பதவுரை

நல் போது

நல்ல புஷ்பங்களிலே

வண்டு கிண்டும்

வண்டுகள் குடையப்பெற்ற

நறையூர், நின்ற நம்பீயோ!- ;

இமையோர்

நித்யஸூரிகள்

எப்போதும்

எக்காலத்திலும்

பொன்மலர் இட்டு

நல்ல பூக்களை ஸமர்ப்பித்து

தொழுது

வணங்கி

தங்கள்

தங்களுடைய

கை போது கொண்டு இறைஞ்சி

புஷ்பம் போன்ற கைகளினால் அஞ்ஜலிசெய்து

கழல் மேல்

திருவடிகளிலே

வணங்க நின்றாய்

ஆச்ரயிக்குமாறு நிற்பவனே!

இப்போது

இன்று

என் நெஞ்சின் உள்ளே

எனது மனத்துள்ளே

புகுந்தாயை

வந்துபுகுந்த வுன்னை

போகல் ஒட்டேன்

வேறிடம் போகவொட்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவரீரை வணங்கி வாழ்த்தி வழிபாடு செய்யுமவர்கள் பல்லாயிரவர் குறையற்றிருக்கச் செய்தேயும் அவர்கட்குக் காட்சிகொடுத்துக் கொண்டிருக்கு மிருப்பிற்காட்டிலும் என்னெஞ்சிலே வந்து புகுந்திருக்குமதுவே சிறப்பு என்று திருவுள்ளம்பற்றி இமையோர்களையும் விட்டு என்னெஞ்சிலே புகுந்தருளிற்று; இனி நான் போகலொட்டேன் – என்கிறார்.

பொன்மலர் – பொன்போல் விரும்பத்தக்கமலர் என்றபடி.  ‘தொழுது இறைஞ்சி, வணங்க’ என்ற ஒருபொருட் பன்மொழிகள் மனமொழி மெய்களாகிற த்ரிகரணங்களினுடையவுமு் வ்ருத்தியைச் சொல்லுகின்றன வென்னலாம்.  கைபோது கொள்ளுதல் – அஞ்ஜலி செய்தல்.

 

English Translation

All the time with golden flowers, gods in sky offer worship,  Folding their lotus soft hands, falling at your lotus feet, Now I have you in my heart, I shall never let you go!  Bumbele-bees in nectared groves, -Naraiyur Lord-in-residence O!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain