(1415)

ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடையதே ரொருவனாய் உலகில்

சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை மலங்கவன் றடுசரந் துரந்து

பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப் பகலவ னொளிகெட, பகலே

ஆழியா லன்றங் காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந் தானே.

 

பதவுரை

ஊழி ஆய்

-

காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும நிர்வாஹகனாய்

ஓமத்து உச்சி ஆய்

-

யஜ்ஞங்களுக்குத் தலைவனாய்

ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய்

-

ஒற்றைச் சக்கரத்தேர் வலவனான ஸூர்யனுக்கு அந்தராத்மாவாய்

உலகில்

-

இவ்வுலகத்திலே,

சூழி மால் யானை

-

முகபடாத்தையுடைத்தாய்ப் பெரிதான ஸ்ரீகஜேந்திரத்தினுடைய

துயர் கெடுத்து

-

துன்பத்தைப் போக்கினவனாய்

அன்று இலங்கை மலங்க அடு சரம் துரந்து

-

முன்பொருகால் லங்காபுரியானது பங்கமடையுமாறு கொலையம்புகளைப் பிரயோகித்தவனாய்,

அன்று அங்கு;

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி

-

வலிமைமிகுந்த அர்ஜுநனுக்கு அருள்கூர்ந்து

பகலவன் ஒளி கெட

-

ஸூர்யன் ஒளிமழுங்கும்படி

பகலே

-

பகற்போதிலேயே

ஆழியால் ஆழியை மறைத்தான்

-

சக்கராயுதத்தினால் ஸூர்யனை மறைத்தவனான பெருமான்

அரங்கம் மா நகர் அமர்ந்தான்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஓமத்து உச்சியாய் = ஓமம் - ஹோமம்; யாகமென்றபடி.  உச்சி என்றது – பிரதானன் என்றபடி.  “அஹம்ஹி ஸர்வயஜ்ஞாநாம் போக்தா” என்றும் “போக்தாரம் யஜ்ஞதபஸாம்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வயஜ்ஞ ஸமாராத்யன் என்றவாறு.

ஒரு காலுடையதேரொருவனாய் =  ஒற்றைச்சக்கரம் பூண்ட தேரையேறி நடத்துமவன் ஸூர்யன்; அவனுக்கு அந்தர்யாமி.

சூழி மால்யானை = சூழியாவது முகபடாம்.  பிங்கல நிகண்டில் 1287 காண்க.  யானையின் முகப்போர்வை.  காட்டில் திரிந்து கொண்டிருந்த கஜேந்திராழ்வானுக்கு முகபடாம் இராதாயினும் உரிமைபற்றிய விசேஷணமிடுதல் தமிழ்வழக்காம்.

 

English Translation

The Lord of discus is the indweller of the Single-wheel-chariot Sun-god and receiver of the offerings made of the fire altar.  He wielded his discus the save the elephant in distress.  He rained fire-arrows over Lanka City.  He favoured the righteous Arjuna in the great Bharata war by masking the Sun with his discus, making day appear like night. He is the resident of Arangama-Nagar.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain