nalaeram_logo.jpg
(33)

நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்

வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்

தோள்கள் இருந்தவா காணீரே சுரிகுழ லீர்வந்து காணீரே.

பதவுரை

நாள்கள்

-

(கண்ணன் பிறந்தபின்பு சென்ற) நாட்கள்

ஓர்நாலு ஐந்து திங்கள் அளவிலே

-

ஒரு நாலைந்து மாதத்தளவிலே

தாளை நிமிர்ந்து

-

காலைத் தூக்கி

சகடத்தை

-

சகடாஸுரனை

சாடிப்போய்

-

உதைத்துவிட்டு,

வாள் கொள்

-

ஒளிகொண்டதாய்

வளை

-

வளைந்திராநின்றுள்ள

எயிறு

-

கோரப்பற்களையுடைய பூதனையினது

ஆர் உயிர்

-

அரிய உயிரை

வவ்வினான்

-

முடித்த கண்ணனுடைய

தோள்கள் இருந்த ஆ காணீர்!

சுரி குழலீர்

-

சுருண்ட கேசத்தையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணபிரான் நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருக்க, யசோதையும் யமுனைக்குப் போயிருக்க, அந்த வண்டியில் கம்ஸனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்து மேல்விழுந்து கொல்ல முயன்றதை அறிந்து, பாலுக்கு அழுகிற பாவனையாலே தனது சிறிய திருவடிகளை மேலே தூக்கி யுதைத்தருள, அவ்வுதை பட்டமாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்கிற கதை முன்னடிகளில் அடங்கியுள்ளது.  இப்படி சகடத்தை முறித்தவனும் பூதனையை முடித்தவனுமான பெருமானுடைய தோளழகை வந்து காணுங்களென்றாளாயிற்று.

‘‘நாலைந்து திங்களளவிலே’’ என்பதற்கு -  நாலு அல்லது ஐந்து மாதங்களுக்குள்ளே என்றும், (நாலு மைந்துங்கூடின) ஒன்பது மாதங்களுக்குள்ளே என்றும் (நாலால் பெருக்கப்பட்ட ஐந்தாகிய) இருபது மாதங்களுக்குள்ளே என்றும் பொருளாகும்.  இவ்வாழ்வார் மங்களாசாஸ நபரராதலால், ஸ்வலப்யஸிலே அரிய பெரிய காரியஞ்செய்தானென்று சொன்னால் கண்ணெச்சில்படுமோ என்றஞ்சி அங்ஙனம் த்ருஷ்டிதோஷம் வராமைக்காக, மாதம்நாலென்றும் ஐந்தென்றும் ஒன்பதென்றும் இருபதென்றுந் தெரியாதபடி மயங்கவருளிச் செய்தனரென்று ரஸோக்தியாக அருளிச்செய்வர் பூருவர்.

‘‘சகடத்தைச் சாடிப்போய். . . . ஆருயிர் வௌவினான்’’ என்கிறாரே; பூதனையே முடித்தது முன்னமும் சகடத்தை முறித்தது பின்னும் நடந்திருக்க முன்பின்னாக மாறாடிச் சொல்லுவானேன்? என்னில்; முறைப்படச் சொல்ல வேணுமென்கிற எண்ணமில்லையென்க.  அந்தந்த காரியங்களைச் செய்தவன் என்பது மாத்திரமே விவக்ஷிதம்.  எயிறு + ஆருயிர், எயிற்றாருயிர்.  எயிறு - எயிற்றையுடையவளுக்கு ஆகுபெயர்.  ‘‘எயிற்றியாருயிர்’’ என்பது எயிற்றாருயிரென விகாரப்பட்ட தென்பாருமுளர்.

சந்திரனுக்குப் பெயரான திங்களென்னுஞ் சொல் மாதத்தை எங்ஙனமே குறிக்குமென்னில்; சந்திரனுடைய கலைகள் ஒருமுறை தேய்ந்து வளர்தல் ஒரு மாதம்  எனச் சந்திரனாலறியப்படும் மாதத்திற்கு லக்ஷணை; இச்சொல் சாந்த்ரமாநத்து மாதத்தையே குறிக்க வேண்டியதாயினும் ஸௌரமாநத்து மாதத்தையும் வழக்கில் குறித்து வருகின்றது.

English Translation

O Ladies with curly locks, come here and see the arms of this child.  About four or five months old, he smote the devilish cart and sucked the life out of the brightly smiling ogres Putana.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain