nalaeram_logo.jpg
(26)

உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண

இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்

பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்

முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ்முலை யீர்வந்து காணீரே.

பதவுரை

உழந்தாள்

-

(நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய

நறு நெய்

-

மணம் மிக்க நெய்யை

ஒரோ தடா

-

ஒவ்வொரு தடாவாக

உண்ண

-

(கண்ணன்) அமுதுசெய்த வளவில்

இழந்தாள்

-

(பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை

எரிவினால்

-

வயிற்றெரிச்சலாலே

ஈர்த்து

-

கையைப் பிடித்திழுத்து

எழில்மத்தின்

-

அழகிய மத்தினுடைய

பழ தாம்பால்

-

சுற்றிக்கடைந்தமையாலுண்டான) பழமை பொருந்திய தாம்பை

ஒச்ச

-

(அடிப்பதாகக்) கையிலெடுக்க

பயத்தால்

-

அச்சத்தாலே

தவழ்ந்தான்

-

(அதைத் தப்பிப் போவதாக) தவழ்ந்த கண்ணனுடைய

முழந்தான் இருந்த ஆ

-

முழங்கால்களிருந்தபடியை

காணீர்!

முகிழ் முலையீர்

-

முகிழ்த்த முலையையுடைய பெண்காள்!

வந்து காணீர்!!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கீழ்ப்பாட்டிற்போல இப்பாட்டிலு உழந்தாள் என்றதும் இழந்தாள் என்றதும் -  தன்மையில் வந்த படர்க்கை.  ச்ரமப்பட்டுக் கறந்து காய்த்துத் தோய்த்துக் கடைந்து வெண்ணையாக்கி யுருக்கித் தடாக்களிலே நான் சேர்த்து வைத்திருந்தேன்.  அந்த நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமாகாதபடி இவன் வாரியுண்டான்.  இவ்வளவு நெய்யை வாரியுண்டால் ஜரிக்கமாட்டாதே!’ என்கிற வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து, மத்திலே சுற்றிக் கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக நான் ஓங்க, பயத்தாலே அதைத் தப்புவதாகத் தவழ்ந்தான்; இப்படிப்பட்ட இவனுடைய முழந்தாள்கள் இருக்கும்படியைப் பாருங்கள் என்கிறாள்.

இனி, தன்மையில் வந்த படர்க்கையாகக் கொள்ளாமல் படர்க்கையாகவே கொண்டு, பெரியாழ்வார் தாமான தன்மையில் அருளிச்செய்கிற ரென்னவுமாம்.

இழந்தாள் - பிள்ளையை இழந்ததாக நினைத்தவளென்கை; இவ்வளவு நெய்யை வாரியுண்ட பிள்ளை பிழைக்கப் போகிறானோ என்று அஞ்சினள்போலும்.  பயம் -  வடசொல்.

English Translation

Full breasted Ladies, come here and see the beautiful knees of this child.  He ate he butter from every pot, so painstakingly collected by his unfortunate mother, and incurred her wrath.  When she pulled him up and threatened him with a churning rope, he cringed away in fear!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain