(1450)

குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்

விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங் கழல்நிற அம்பது வானவனே

ஆண்டாயுன்னைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

குழல் நிறம் வண்ண

-

திருக்குழலின் நிறம் போன்று நீலமான நிறத்தையுடையவனே!,

நின் கூறு கொண்ட

-

உனது திருமேனியிலே ஒரு பகுதியை இடமாகவுடையவனும்

தழல் நிறம் வண்ணம்

-

நெருப்பின் நிறம் போன்ற நிறமுடையனுமான ருத்ரனால்

நண்ணார் நகரம் விழ

-

பகைவரான அசுரர்களின் முப்புரம் முடியும்படியாக

நனி மலை

-

மிகப் பெரிதான மேருமலை போன்ற

சிலை

-

வில்லை

வளைவு செய்து

-

வளைத்து

அங்கு

-

அதுதன்னிலே

அழல் நிறம் அம்பு அது ஆனவனே

-

நெருப்புப்போன்ற அம்பில் ஆவேசித்து நின்றவனே!

ஆண்டாய் * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

குழல் நிறவண்ண – கரிய திருமேனியுடையாய்! என்றபடி.  நின்கூறு கொண்ட தழல்நிற வண்ணன் = எம்பெருமானுடைய ஸௌசீல்ய  குணத்தைப்பற்றி பேசும்போது தாமஸ தெய்வமான ருத்ரனுக்கும் தனது திருமேனியின் வலப்பக்கத்தில் இடங்கொடுத்து ஆதரிக்குமவனென்று ஆழ்வார்கள் ஈடுபட்டருளிச்செய்வது வழக்கம்; திருவாய்மொழியில் “வலத்தனன் திரிபுரமெரித்தவன்” 1-3-9 என்ற பாசுரத்தின் வியாக்கியானத்தில் “பச்சையகாதசமே ருத்ராந் தக்ஷிணம் பார்ச்வ மாச்ரிதாந்” என்ற மோக்ஷதர்ம வசநத்தை எடுத்துக்காட்டியிருப்பது இங்கே அநுஸந்தேயம்.

 

English Translation

Dark as the dark hair with portion on frame given to the fiery red glowing Siva, -aiming his hot arrows over the three-city, burning the Eastern to ashes in yore!  O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain