(1451)

நிலவொடு வெயில்நில விருசுடரும் உலகமு முயிர்களு முண்டொருகால்,

கலைதரு குழவியி னுரு வினையாய் அலைகட லாலிலை வளர்ந்தவனே

ஆண்டாயுனைக்  காண்பதோ ரருளெனக் கருளுதியேல்

, வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே

 

 

பதவுரை

ஒரு கால்

-

(பிரளயமாகிற) ஒரு ஸமயத்தில்,

நிலவொடு வெய்யில் நிலவு இரு சுடரும்

-

நிலாவோடும் வெய்யிலோடும் கூடி ஸஞ்சரிக்கிற சந்திரஸூர்யர்களையும்

உலகமும்

-

உலகங்களையும்

உயிர்களும்

-

(அங்குள்ள) பிராணிகளையும்

உண்டு

-

திருவயிற்றிலே வைத்து நோக்கி

கலைதரு

-

மிகச்சிறிய வடிவுகொண்ட

குழவியின் உருவினை ஆய்

-

குழந்தை ரூபியாய்க் கொண்டு

அலை கடல்

-

அலையெறிகின்ற கடலினிடையே

ஆல் இலை

-

ஆலந்தளிரில் கண்வளர்ந்தருளினவனே!

ஆண்டாய் * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலைகருகுழவி ‘கலா’ என்னும் வடசொல் ‘பதினாறில் ஒரு பங்கு’ என்று பொருள்படும் முகத்தால் மிகச் சிறுமையை உணர்த்திற்றாகும்; இளங்குழந்தை என்றபடி. இனி, உலகத்திலுள்ள குழந்தைகள் போலன்றியே அறிவுமிக்க குழந்தை என்னவுமாம்; அப்போது சாஸ்த்ரமென்னும் பொருளதான ‘கலா’ சப்தம் இலக்கணையால் அறிவுக்கு வாசகமாகும்

 

English Translation

Swallowing the Earth and the sun and Moon, living and the non-living, all in a trice, you came as an innocent child in the ocean, floating on a fig leaf in yore in the past, O Lord!  If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain