(1452)

பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,

ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்றுஅங் கோரெழுத் தோருரு வானவனே

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

பார் எழும்

-

ஏழு தீவுகளோடு கூடிய பூமிக்கும்

கடல் எழும்

-

ஸப்தஸாகரங்களுக்கும்

மலை எழும்

-

ஸப்தகுலாசலங்களுக்கும்

ஆய்

-

நிர்வாஹகனாயிருந்து கொண்டு

அங்கு

-

அப்படிப்பட்ட பிரளயம் வந்த காலத்து,

சீர் கெழும்

-

அழகு மிக்க

இ உலகு ஏழும் எல்லாம்

-

இவ்வுலகங்களேழையும்

ஆர் கெழு வயிற்றினில்

-

அழகு மிக்க திருவயிற்றிலே

அடக்கி நின்று

-

அடக்கி வைத்திருந்தவனாய்

ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே

-

அகாரத்திற்கு முக்கியமான பொருளாயிருப்பவனே!

ஆண்டாய்  * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய அகடிதகடநா ஸாமர்த்தியத்தையே மீண்டு மருளிச்செய்கிறார்.

பாரெழு கடலெழு மலையெழுமாய் = “நாவலந்தீவே இறலித்தீவே, குசையின்தீவே கிரவுஞ்சத்தீவே, சான்மலித்தீவே தெங்கின் தீவே, புட்கரத்தீவே யெனத்தீவேழே, ஏழ்பெருந்தீவிற்கு மேழ்பொழிலெனப்படும்” என்ற திவாகர நிகண்டின்படி எழுவகைப்பட்ட தீவுகளையுடைத்தான பூமி என்று பொருள்படப் ‘பாரெழும்’ எனப்பட்டது.

கடலெழும் = “உவரோடு கரும்பு மது நெய் தயிர் பால் புனல், மாகடலேழென வகுத்தனர் புலவர்” என்னப்பட்ட ஸப்தஸாகரங்களும்.

மலையெழும் = “இமயமந்தரம் கைலை வடவிந்தம், நிடதமேமகூடம் நீலகிரி யெனக், குலவரை யேழுங் கூறுமென்ப” என்னப்பட்ட ஸப்தகுலபர்வதங்களும்.  ஆய் என்றது இவற்றுக்கெல்லாம் எம்பெருமானே நிர்வாகனென்கை.  இவற்றின் ஸ்திதியெல்லாம் எம்பெருமானுடைய ஸங்கல்பாதீகமென்றபடி.

ஒரெழுத் தோருருவானவனே = 1. “அகரமுதலவெழுத் தெல்லாம்” என்கிறபடியே எல்லாவெழுத்து கட்கும் மூலமான யாதொரு அகாரமுண்டு, அதற்குப் பொருளானவனே! என்கை.  அகாரமானது எழுத்துகட்கெல்லாம் மூலகாரணமாயிருப்பதுபோல உலகுகட்கெல்லாம் மூலகாரணமாயிருப்பவனே! என்பதும் விவக்ஷிதம்.

 

English Translation

Bearing in your belly the seven confinents, seven mighty oceans and seven mighty hills, seven worlds of beauty and all other things, You became the alipha of sound and the shapes.  O Lord! if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain