(1454)

உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய்,

பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் இருக்கினி லின்னிசை யானவனே

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.


பதவுரை

இருக்கு உறும் அந்தணர்

-

வேதம் வல்லவரான பிராமணர்கள்

அமரர்கள்

-

தேவதைகளினால்

பெருக்க மொடு அமர

-

(தாங்கள்) செல்வம் பெருகி வாழும்படியாக

சந்தியின் வாய்

-

ஸந்தியா காலந்தோறும்

உருக்குறு நறு நெய் கொண்டு

-

உருக்கின மணம் மிக்க நெய்யைக் கொண்டு

ஆர் அழலில்

-

ஆர்ந்த அக்நியில்

நல்கும்

-

ஹோமம் பண்ணுவதற் குறுப்பான

இருக்கினில்

-

வேதத்திலுள்ள

இன் இசை ஆனவனே

-

பிரணவத்திற்குப் பிரதிபாத்யனானவனே!

ஆண்டாய் * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேதமோதியுணர்ந்த அந்தணர்கள் ஸந்த்யாகாலந்தோறும் உருக்கின நெய்யைக் கொண்டு அக்நியில் ஹோமம் செய்வதற்கு மந்திரமாகிய யாதொரு வேதமுண்டு, அதன் உறுப்பாகிய பிரணவத்தினால் ப்ரதிபாத்யனா யுள்ளவனெ!.

இருக்கு = வடசொல்லிகாரம்; இச்சொல் வேதங்களுக்குப் பொதுப் பெயரும் ஒரு வேதத்துக்குச் சிறப்புப் பெயருமாக வழங்கும் சந்தி – ஸந்த்யா.

இன்னிசையானவனே =  ‘இசை’ என்னுஞ் சொல் லக்ஷிதலக்ஷணையால் பிரணவத்தைச் சொல்லும்; எங்ஙனேயெனில், இசையாவது ஸ்வரம்; ஸ்வரமென்பது பிரணவத்திற்கும் வாசகம்; “யத்வேதாதௌஸ்வர: ப்ரோக்த:” என்றது காண்.

 

English Translation

Lighting the fire-altar morning and evening.  Vedic seers offer Ghee obiations, chanting the Mantras of Vedas to gods, -you become the music of their Rig-Yajus-Sama. O Lord! if you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain