(1455)

காதல்செய் திளையவர் கலவிதரும் வேதனை வினையது வெருவுதலாம்,

ஆதலி னுனதடி யணுகுவன் நான் போதலார் நெடுமுடிப் புண்ணியனே

ஆண்டாயுனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

போது அலர் நெடு முடி

-

உரிய காலங்களிலுண்டான புஷ்பங்களை யணிந்த நீண்ட திருவபிஷேகத்தையுடைய

புண்ணியனே

-

பரிசுத்தனே!

இளையவர்

-

இளம்பெண்கள்

காதல் செய்து

-

அன்பு செய்து

தரும்

-

கொடுக்கிற

வேதனை

-

துக்கரூபமான

கலவி அது

-

கலவிக்கு அடியாகவுள்ள

வினை

-

கருமமானது

ெருவுதல் ஆம்

-

(எனக்கு) அச்சந்தருவதாக வுள்ளது;

ஆதலில்

-

ஆகையினால்,

உனது அடி நான் அணுகுவன்

-

(அந்தக் கருமம் தொலையும்படி) உனது திருவடிகளை நான் வந்து பணிகின்றேன்;

ஆண்டாய் * * * வேண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நான் செய்த தீவினைகளை நினைக்கப் புகுந்தால் எனக்கு உடல் நடுங்குகின்றது; அநர்த்தங்களிலே கொண்டு மூட்டும்படியான விஷயாந்தர போகங்களுக்குக் காரணமான தீவினைகள் பல்லாயிரம் நான் செய்துளே னாதலால் அத்தீவினைகளின் பலனாக இன்னமும் நாம் எவ்வளவு வேதனைகளை அனுபவிக்க நேருமோவென்று மிகவும் அஞ்சா நின்றேன்; திருவிண்ணகர் மேயவனே! உனது திருவடிகள் அஞ்சினார்க்குப் புகலிடமாதலாலும், நீ தானும் ஆச்ரிதாக்ஷணம் பண்ணக்கடவேனென்று வளையம் குடியிருக்கிறாயாதலாலும் என் அச்சந்தீர உன் திருவடிகளை வந்து பணிந்தேன்; உன்னையொழிந்த விஷயங்களில் ருசியைப் போக்கின நீயே உன்னை நான் கண்ணாலே காணலாம்படி என்மீது அருள்புரிவாயாகில் நன்று என்றாராயிற்று.

 

English Translation

Pleasure that the lurid-dames offer to charm is filled with much pain and the fear of my death, therefore I came to you seeking your feet, Lord wearing fresh Tulasi wreath and a crown!  O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world, Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain