(1456)

சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் காதல்செய் யாதுன கழலடைந்தேன்,

ஓதல்செய் நான்மறை யாகியும்பர் ஆதல்செய் மூவுரு வானவனே,

ஆண்டாய் உனைக் காண்பதோ ரருளெனக் கருளுதியேல்

வேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

ஓதல் செய்

-

பரம்பரையாக ஓதப்பட்டு வருகிற

நால் மறை ஆகி

-

நான்கு வேதங்களுக்கும் நிர்வாஹகனாய்

உம்பர் ஆதல் செய் மூ உரு ஆனவனே

-

மேன்மையுடையவராகச் செய்யப்பட்டிருக்கின்ற பிரமன் சிவனிந்திரனாகிய மூவர்க்கு நியாமகனாயிருப்பவனே!

சாதலும் பிறத்தலும் என்ற இவற்றை

-

சாவதும் பிறப்பதுமான ஸம்ஸாரத்தை

காதல் செய்யாது

-

விரும்பாமல்

உன கழல் அடைந்தேன்

-

உனது திருவடிகளை அடைந்தேன்;

ஆண்டாய் * * * வேண்டேன் -.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “சாமாறுங் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து, ஏமாறிக் கிடந்தலற்றுமிவை யென்னவுலகியற்கை” என்று ஞானிகள் வெறுக்கும்படியான இந்த ஸம்ஸார ஸ்வபாவத்தை என் சொல்வோம்!; மரண ஸமயத்திலே படும் கஷ்டங்களையும் பின்பு நரகங்களிற் படுங்கஷ்டங்களையும் மறுபடியும் கருக்குழியிலே வந்து புகுந்து படும் கஷ்டங்களையும் நினைத்து நினைத்து வெறுத்து ‘இருள் தருமா ஞாலத்து ளினிப்பிறவி யான்வேண்டேன்’ என்று இந்நிலத்திற் பிறவியைக் காறி யுமிழ்ந்து, நித்ய விபூதிப்ராபகமான உன் திருவடிகளைப் பணிந்தேன்; அருள்புரியவேணும் திருவிண்ணகர் மேயவனே! என்கிறார்.

ஓதல்செய் நான்மறையாகி ஏட்டில் எழுதப்படுகையின்றியே பரம்பரயா அதயயநம் பண்ணியே வருகின்ற நான்கு வேதங்களுக்கும் ப்ரவசந கர்த்தாவா யிருப்பவரென்கை.

 

English Translation

Life after death after life in between, not loving these I have come to your feet. Lord of the four Vedic chants and their truths you become the Lord of the three major gods! O Lord! If you grace me the grace of your holy presence, I seek to be freed of the birth in this world. Vinnagar!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain