(1221)

சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்

கறையார் நெடுவே லரக்கர் மடியக் கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர் ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,

மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே!

 

பதவுரை

அன்று

-

முன்பொருகாலத்தில்,

சிறை ஆர

-

சிறகோடு கூடின

ஒன்று

-

ஒப்பற்ற

உவணம் புன்

-

கருடப்பறவையின் மீது

ஏறி

-

ஏறிக்கொண்டெழுந்தருளி

செருயில்

-

யுத்த்த்தில் (எதிர்த்த)

கறை ஆர் நெடுவேல் அரக்கர்

-

(ரத்தக) கறை நிரம்பிய பெரிய வேற்படையை யுடைய ராக்ஷஸர்கள்

திசை நான்கும் நான்கும் இரிய

-

எட்டுத்திசைகளிலும் (சிலர்) சிதறியோடும்படியாகவும்

மடிய

-

(பலர்) உயிர்மாண்டொழியும் படியாகவும் (செய்து)

கடல் சூழ் இலங்கை

-

கடலால் சூழப்பட்ட லங்காபுரியை

கடந்தான்

-

ஒழித்த பெருமானுடைய

இடம் தான்

-

இருப்பிடமான

முறையால் வளர்க்கின்ற மூத்தியர்

-

முறைப்படி ஹோமஞ்செய்கிற மூன்று அக்நிகளையுடையாய்

நால் தேவர்

-

நான்கு வேதங்களையும் அதிகரித்தவராய்

ஐ வேள்வி

-

பஞ்சமஹாயஜ்ஞங்களை அநுஷ்டிப்பவராய்

ஆறு அங்கர்

-

வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவராய்

ஏழின் இசையோர்

-

ஸப்தஸ்வாங்களையும் அறிந்தவரான

மறையோர்

-

ஸவதிகப்ராஹ்மணர்கள்

வணங்க

-

(நித்யவாஸம்பண்ணிக் கொண்டு) வணங்குவதனால்

புகழ் எய்து நாங்கூர்

-

புகழ் பெற்றிருக்கின்ற திருநாங்கூரிலே

மணிமாடக்கோயில்

-

என் மனனே வணங்கு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உத்தர ஸ்ரீராமாயணத்தை அடியொற்றி முன்னடிகள் கூறப்பட்டன. மாலி சுமாலி முதலிய ராக்ஷஸர்களைத் திருமால் வெல்லும்போது பெரிய திருவடியின்மீதேறியிருந்து வென்றமை. ப்ரஸிதம். அப்போது திரண்டுவந்த ராக்ஷஸர்களில் பலர் மூலைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடிச்சென்றதும் பலர் போர்க்களத்திலகப்பட்டு மாண்டொழிந்ததும் அறிக. கருடனுக்கு வடமொழியில் ஸுபர்ண என்று பெயர், அது உவணமெனத் திரியும்.

கறையார் நெடுவேலரக்கர் – வேற்படையை எப்போதும் கொலைத் தொழிலிலேயெ செலுத்திக்கொண்டிருப்பதனால் கறைகழுவ அவகாசமே யில்லாமல் (உதீரக்) கறை நிரம்பியிருக்குமென்க.

திருநாங்கூர் வைதிகப்ராஹ்மணர் நிறைந்த வூரென்கிறது பின்னடிகளில் முத்தீ –கார்ஹபத்யம், அஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளெனப்படும். “ஐவேள்வி ஆறங்கர் ஏழினிசையோர்“ இதன் விவரணங்கள் (3-4-1) “ஒரு குறளாய்“ என்ற பாசுரத்தினுரையிற் காணத்தக்கன புகழெய்து – பரமவைதிகர்ள் வாழுமிடமென்று புகழ்பெற்றநாங்கூர்.

 

English Translation

Then in the yore the Lord rode on his winged Garuda mount and traversed the battlefield destroying the spear-wielding Rakshasas in the eight Quarters then also besieged the island city of Lanka. He resides in Nangur where the three fires, the four Vedas, the five sacrifices, the six Angas, and the seven Svaras are cultivated by proper method as Vedic worship, by seers of high reputation. Offer worship in Manimadakkoyil, o Heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain