(1220)

கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்

இலைப்புண்ட ரீகத் தவளின்ப மன்போ டணைந்திட்ட வம்மானிடம்,ஆளரியால்

அலைப்புண்ட யானை மருப்பு மகிலும் அணிமுத்தும் வெண்சா மரையோடு,பொன்னி

மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

 

பதவுரை

அன்று

-

முன்பொருகாலத்தில்,

கொலை புண்தலை ஒன்று குன்றம் உய்ய

-

கொலைத்தொழில் செய்ய வல்லதும் புண்பட்ட தலையையுடையதும் மலைபோன்றதுமான ஒரு யானை உஜ்ஜீவிக்கும்படியாக

கொடுமா முதலைக்கு இடர் செய்து

-

கொடுமையிற் சிறந்த முதலைக்கு துன்பமுண்டாக்கி

(இந்த ஸந்தோஷத்தினால்)

கொங்கு ஆர் இலை புண்டரிகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட

-

பரிமளம் நிரம்பிய இலைகளையுடைய தாமரைப்பூவிற் பிறந்தவளான பிராட்டியின் சேர்த்தி யின்பத்தை அன்புடன் அநுபவிக்கப்பெற்ற

பொன்னி

-

காவேரியானது,

ஆள் அரியால்

-

வீரச் சிங்கங்களாலே

அலைப்புண்ட

-

ஸம்ஹரிக்கப்பட்ட

யானை

-

யானைகளினுடைய

மருப்பும்

-

தந்தங்களையும்

அகிலும்

-

அகில் மரங்களையும்

அணிமுத்தும்

-

அழகிய முத்துக்களையும்

வெண் சாமரையோடு

-

வெளுத்த சாமரங்களையும்

மலை பண்டம் அண்ட

-

மலையில் விளையக்கூடிய மற்றும் பல வஸ்துக்களையுமெல்லாம்

திரை

-

அலைகளாலே

உந்து

-

தள்ளிக்கொண்டு பெருகப்பெற்ற

நாங்கூர்; * * *  வணங்கு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயரைத் தீர்த்தது மாத்திரம் கீழ்ப்பாட்டிற் சொல்லிற்று; அவ்வளவில் ஆழ்வார்த்ருப்திபெறுவரோ; எம்பெருமான் ஆச்ரிவிரோதிகளைக் களைந்தொழித்தால் அந்த ஸந்தோஷத்திற்குப் போக்குவீடாகப் பிராட்டி பஹுமானம் பண்ணுவதொன்றுண்டு; அதாவது திருமுலைத்தடங்களாலே அணையவமுக்கிக் கட்டுதல்.  ஸ்ரீராமபிரான் கரதூஷணாதிகளைக் கொன்றெழித்து மீண்டபோது இப்படிப்பட்ட வெகுமதியைப் பிராட்டிசெய்தமை ஸ்ரீராமயணத்தில் விளங்குமே: “தம்ஸ்ரீ த்ருஷ்டுவா  சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்-பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே“ என்னா நின்றது.  அப்படியே, ஸ்ரீகஜேந்திர விரோதியான முதலையைத்துணித்துச் சென்றபின்பு பிராட்டி செய்த ஸத்காரத்தை ரிஷிகள் சொல்லா தொழிந்தாலும் அக்குறைதீர  ஆழ்வார் தாமருளிச்செய்னிறார்- “கொடுமா முதலைக்கு இடர் செய்து புண்டரிகத் தவளின்ப மன்போடணைந்திட்ட வம்மான்” என்கிறார்.

கொலைப்புண்தலைக்குன்றம்= ‘குன்றம்’ என்றது உவமவாகு பெயரால் யானையை உணர்த்தும்; யானைக்குக்  கொலைத் தொழில் நிகழ்த்துவதும், மாவட்டியின் குத்தலினால் புண் ஆறாத தலையையுடைத்தாயிருத்தலும்  சாதியியல்பென்று கொண்டு இவ்விசேஷணங்களிடப்பட்டன.

திருநாங்கூரில் காவிரியாறு நேரே பெருகுகின்றதில்லையாயினும் காவிரிக்கால்களின் பெருக்கு சுற்றுப்பிரதேசங்களி லுள்ளதுபற்றி ‘பொன்னி…திரையுந்து நாங்கூர்’ எனப்பட்டது. ஆளரியால்= ஆண்மைத்தனம் (பௌருஷம்) நிரம்பிய சிங்கங்களினால் என்கை. மலை முகட்டினின்று பெருகும் பெரிய ஆற்றுப்பெருக்குகளில் யானைத் தந்தங்களும் அகில் மரங்களும் முத்துக்களும் முதலியன உந்தப்பபட்டு வருதல் வழக்கமென்க. ”என்று ஸ்ரீரங்க ராஜஸ்தவத்திலும் காவேரி வர்ணகத்தில் அருளிச் செய்ததறிக.

ஆர்த் துவண்டலம்பும் சோலை தவமாவது - சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யும் காரியம்: முக்ஷிக்களாயிருப்பார் மோஷர்ர்த்தமாகத் தவம்புரிவர்கள்: புபுக்ஷிக்களாயிருப்பார்ஸ்வர்க்கம் முதலிய ப்ரயோஜ நாந்தரங்களைக் குறித்துத் தவம் புரிவார்கள்: நான் ஒருவிதமான தவமும் செய்திலேன்.

ஸத்விஷயத்தில் விநியோகப்படுகிற தனத்தை நான் படைக்கவில்லை என்கிறார்‘தனம் படைத்தாரிலல்லேன்” என்பதனால். ‘பொருள் கையுண்டாய்ச் சொல்லக்காணில் போற்றி யென்றேற்றெழுவர்” (திருவாய்மொழி - கூ- க-ங) என்றபடி கையில் நாலுகாசு நடமாடுமளவு கழிந்தால் பந்துக்களும் நோக்கமாட்டார்களென்ற கருத்துடன் இரண்டாமடி அருளிச்செய்கிறார். உவர்த்த நீர்போல உப்புத் தண்ணீரை முகத்திலே இறட்டிக்கொண்டால் கண்விழிக்க வொண்ணுதபடி கரிக்குமாபோலே ஏன்னை அவர்கள் நேர்முகம் பார்க்கமுடியாதபடி அவர்கட்கு நான் தீயனுய்விட்டேனென்கை.

இப்பாசுரத்திற்கு உள்ளுறை பொருள் :- (தவத்துளார்இத்யாதி) உன்னுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு விரோதியாக நான் ஒரு ஸ்வப்ரவ்ருத்தியும் செய்யவில்லை. கையில்  காசுள்ளவனுயிருந்தேனாகில் ஆகிஞ்சந்யத்தில் குறையுடையேனுவேன்: அங்ஙனுமில்லை: அகிஞ்சஙர்களில் தலைவனுயிராநின்றேன். கொண்டபெண்டிர்மக்களுற்றர்சுற்றத்தவர் என்ற ஆபாஸபந்துக்களோடே போதுபோக்காநின்றேனுகில் ‘சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்னும் நிலைவாய்த்த கைப்பற்றுவோமென்று நீ ஆறியிருக்கலாம்: அங்ஙனுமில்லை: பந்துக்களுக்கு என்னால் ஆகக் கூடிய நன்மை ஒன்றுமில்லாமையாலே அவர்கள் என்னை விட்டொழிந்தனர்: சேலேயகண்ணி யிடத்தும் நான் கள்ளனுய்ப் போந்தபடியாலே அவர்களும் என்னைத் துரத்திவிட்டனர்.  இனி உன்னுடைய விஷயீகாரம் இடையூறின்றி உள்புகாலாமென்றவாறு. இந்த உள்ளுறை பொருளுக்கு நான்காமடியோடே ஸங்கதி எங்ஙனேயென்னில்: இப்படி உன் விஷயீகாரத்திற்கு நான் உசிதனுயிருக்கச்செய்தேயும் என்னை நீ உபேக்ஷிப்பதால் என்னை நீ வீணே படைத்தாயிறே என்கிறார். அவத்தம் அவத்தம் என்ற வடசொல் விகாரம்.

 

English Translation

Then in the yore the Lord saved the heavy footed elephant in distress and gave misery to the terrible crocodile. He takes the lotus-dame Lakshmi in his loving embrace and enjoys her. He resides in Nangur where Ponni, the river Kaveri, brings elephant tusks, fragrant Agil wood, pearls, white whisk and other precious mountain produce on its waves, as offering to the Lord. Offer worship in Manimadakkoyil, O Heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain