(1219)

முதலைத் தனிமா முரண்தீர வன்று முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ முய்ய,

விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி வினைதீர்த்த வம்மானிடம்,விண்ணணவும்

பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,

மதலைத் தலைமென்  பெடைகூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

 

பதவுரை

அன்று

-

முன்பொருகாலத்தில்

முதுநீர்தடத்து

-

அகாதமான நீரை யுடைய பொய்கைக் கரையிலே

முதலை தனி  மா முரண் தீர

-

முதலையினுடைய மிகப் பெரிய துஷ்டத்தனம் தீரும்படியாகவும்

செம் கண் வேழம் உய்ய

-

சிவந்த கண்களையுடைய கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும்

விதலைத்தலை சென்று

-

(அவ்யானை) மிகவும் நடுங்கிக் கிடந்த ஸமயத்தில் எழுந்தருளி

அதற்கே உதவி

-

அந்த யானைக்கு உபகரித்து

வினை தீர்த்த அம்மான் இடம்

-

அதன் இடரை நீக்கின பெருமான் எழுந்தருளியிருக்குமிடமானதும்,

விண் அணவும்

-

விண்ணுலகை அளாவியிருப்பனவாய்

புதலை கபோதம்

-

கலசங்களையும் கபோத வொழுங்குகளையுமுடையனவாய்

ஒளி மாடம் நெற்றி

-

(இழைத்த ரத்னங்களினால்) ஒளி பெற்றனவான மாடமாளிகைகளினுடைய முகங்களிலே,

பவளம் கொழுகால பைங்கால் புறவம்

-

அழகிய பவழத்தூண்போன்ற பசுமையான காலையுடைய புறா

மதலைத்தலை மென் பெடை கூடும் நாங்கூர்

-

கொடுங்கையின் மேலுள்ள மெல்லிய பேடையுடனே கலவி செய்யப்பெற்ற திரு நாங்கூரிலே

மணிமாடக்கோயில் என் மனனே, வணங்கு,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விதலைத் தலைச் சென்று - ‘விதலை’ என்று நடுக்கத்துக்குப் பெயர்; ‘நாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!” என்று அஞ்சி நடுங்கியிருந்தகாலத்தில் என்கை. வடமொழியில், ‘வி’ என்னுஞ் சொல் பக்ஷி யென்னும் பொருளது; பக்ஷிகளில் தலைவனை கருடனை ‘விதலை’ என்கிறது; விதலைத்தலை- கருடன்மேலே என்னவுமாம்.

(விண்ணைவு மித்யாதி) நகரச்சிறப்புக் கூறப்படுகின்றது; திருநாங்கூரில் மாடமாளிகைகள் விண்ணுலகளவும் ஓங்கியிருக்கின்றன: அவற்றில் புறாக்கள் உல்லாஸமாகக் கலந்திருக்கின்றன- என்கிறது. பதலையாவது - நுனியில் ஸ்தாபிக்கப்படும் கும்பங்கள். ‘கபோதம்”  என்றவடசொல் மாடப் புறாவுக்கு வாசகமாயினும், அப்புறாக்கள் தங்கி வாழுமிடமாகிய ஸ்ந்நிவேசத்தையும் தமிழில் கபோதமென்றும் கபோதையென்றும் கபோதியென்றும் வ்யவஹரிப்பதுண்டு. கட்டிடத்தின் ஓர்பகுதி.

“மதவலத்தலை-பிள்ளைத் தூண்களின்தலையிலே” என்பது வியாக்கியானம் அது தான் கொடுங்கை என்னலாம்.

 

English Translation

Then in the yore, the Lord came to the lake, --where the terrible crocodile had the red-eyed elephant in his jaws, --then and there helped the elephant in distress and took him into service. He resides in Nangur, where the Kalasa-topped mansions with pigeonholes rise sky-high, the softly-cooing coral-branch-like red-footed pigeons descend to the lower pillars and display their courtship. Offer worship in Manimadakkoyil, O Heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain