(1218)

நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல்

எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்

கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,

மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.

 

பதவுரை

நந்தாவிளக்கே

-

‘நித்யமாய் ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!

அளத்தற்கு அரியாய்

-

அளவிட முடியாதவனே!

நரநாரணனே

-

நரநாரயணாவதாரம் செய்தருளினவனே!

கரு மா முகில் போல் எந்தாய்

-

கறுத்துப் பெருத்த மேகம் போன்ற எம்பெருமானே

எமக்கே அருளாய் என

-

எங்களுக்கே அருள் செய்ய வேணும் என்று சொல்லி

இமையோர்நின்று பரவும் இடம்

-

தேவர்கள் இந்நிலத்தில் வந்து நின்று துதிசெய்யுமிடமானதும்,

அம் தேன்

-

அழகிய தேன்சாதி வண்டுகள்

எத்திசையும்

-

எல்லாவிடங்களிலும்

கந்தாரம் இசை பாட

-

தேவகாந்தாரி ராகம் பாடவும்

களி வண்டு

-

களி வண்டு சாதியிற் பிறந்த வண்டுகள்

மாடே

-

பக்கங்களில்

மிழற்ற

-

ஆலாபனை பண்ணவும்

மந்தாரம்

-

பாரிஜாத மரங்கள்

நிழல் துதைந்து நின்று

-

நிழல் தர நெருங்கி நின்று

மணம் மல்கும்

-

பரிமளம் நிறைந்திருக்கப்பெற்றதுமான

நாங்கூர்;

-

திருநாங்கூரிலுள்ள

மணிமாடக் கோயில்

-

மணிமாடக் கோயிலென்னுந்திருப்பதியை

என் மனனே வணங்கு-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நந்தா விளக்கே! ஒரு நாளும் அணையாத விளக்கே! என்கை; (நந்துதல்-அழிதல்)  ஒளியினாலே  விளங்கும்  பொருள்  விளக்கு   எனப்படும்; அதுபோல எம்பெருமான் நித்யமாய் ஸ்வயம்ப்ரகாசமான ஜ்ஞாநத்தைக் குணமாகவுடையனாயும் அப்படிப்பட்டஞானமே ஸ்வரூபமாகவுள்ள வனுயுமிருப்பது பற்றி நந்தாவிளக்கு எனப்பட்டான்.

அளத்தற்கு அரியாய் - அளவிட முடியாதவனே! என்கை. உலகத்திலுள்ள பொருள்களை மூன்றுவகைகளாலே அளவிடுதலுண்டு; அதாவது-காலத்தைக் கொண்டும், சேதத்தைக் கொண்டும், வஸ்துவைக் கொண்டும் அளவிடுதல்; இஃது எம்பெருமானிடத்தில் செய்யவொண்ணாது; எம்பெருமான் ஸர்வகாலத்திலு முள்ளவனாதலால் காலபரிச் சேதமில்லாதவன். ஸர்வ வ்யாபியாயிருப்பதால் தேச பரிச் சேதமில்லாதவன். அவனோடொத்த வஸ்த இல்லாமையினால் வஸ்து பரிச்சேதமில்லாதவன். இதுவே திரவியவரிவெஉராஹிதவம்; (த்ரிவித பரிச்சேதராஹித்யம்) என்று ஸ்ரீபாஷ்யாதிகளிற் கூறப்படும். இதுபற்றியே எம்பெருமானுக்கு அநந்தன் என்று திருநாமமாயிற்று.

 

English Translation

Celestials stand and call, “O Nanda-Villaku, lamp-eternal, hard-to-fathom, Namo-Narayana, dark cloud-hued Lord, grace-us!” He resided in Nangur where the bees fill the eight Quarters with their Devagandhari Raga while the bumble-bees follow their songs with shadow accompaniment. The Mandara trees spread fragrance everywhere. Offer worship in Manimodakkoyil, O Heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain