(1162)

கோமங்க வங்கக் கடல்வைய முய்யக் குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,

தாமங் கமருள் படைதொட்ட வென்றித் தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,

பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் புகழ்மங்கை யெங்கும் திகழப்புகழ்சேர்

சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

 

பதவுரை

கோ மங்க

-

க்ஷத்ரியர்கள் அழியவும்

வங்கம் கடல் வையம் உய்ய

-

மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளார் உஜ்ஜூவிக்கவும்

குலமன்னர் அங்கம் மழுவில் துணிய

-

ராஜாக்களுடைய சரீரம்  மழுவாலே துணிபடவும்

தாம்

-

தாமே

அங்கு அமருள்

-

அப்போதுண்டான போர்க்களத்திலே (புகுந்து)

படை தொட்ட

-

ஆயுதத் தொழில் புரிந்த

வென்றி தவம் மா முனியை

-

ஜயசீலனாய்த தபஸ்வியான பரசுராமனாக அவதாரம் பண்ணின பெருமானை

தமக்கு ஆக்க கிற்பீர்

-

ஸ்வாதீனப்படுத்திக்கொள்ள நினைக்கு மன்பர்களே!,

பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி

-

பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும்

புகழ் மங்கை எங்கும் திகழ

-

கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று

புகழ் சேர் சேமம் கொள்

-

புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய்

பை பூ பொழில் சூழ்ந்த

-

பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட

தில்லை…சேர்மின்கள்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வங்கக் கடல் = வங்கமென்று கப்பலுக்குப் பெயர்; இனி என்ற அமரகோசத்தின்படி பங்கம் என்ற வடசொல் அலைக்கு வாசகமாகையால் அச்சொல்லே வங்கமெனத் திரிந்ததென்று கொண்டு ‘அலைகடல்’ என்று பொருள்கொள்வதும் பொருந்தும்.

ஸ்ரீதேவி, பூ தேவி, கீர்த்திதேவி என எம்பெருமானுக்கு மூன்று திவ்ய மஹிஷிகளாம்; இவர்களுள் முதல்தேவி  எம்பெருமானுடைய வலப்பக்கத்தைப் பற்றினள்; இரண்டாந்தேவி இடப்பக்கத்தைப் பற்றினர்; (கீர்த்தியென்னும்) மூன்றாந்தேவி உலக முழுவதையும் இடமாகப் பற்றினால் என்று ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார்காண்மின்.  ஸ்ரீதேவி பூதேவிகட்கு வல்லபனென்று உலகம் நிறைந்த புகழ்பெற்றிருக்கிற எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற தில்லைத் திருச்சித்ரகூட மென்றதாயிற்று. சேமம்-க்ஷேமம்.

 

English Translation

To rid the ocean-girdled Earth of its tyrant king and elevate the souls of the good folk the lord came as parasurama of great penance and merit, and wielded his axe on the kings. Those who wish to make him theirs, -go to Tillai Tiruchitrakudam surrounded by fragrant groves of fame and auspiciousness, where the Lord resides with the lotus-dame on his chest, Earth-dame by his side and Fame dame all around.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain