(1161)

அருமா நிலமன் றளப்பான் குறளாய் அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,

பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம் பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்!

கருமா கடலுள் கிடந்தா னுவந்து கவைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,

திருமால் திருமங் கையொடாடு தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

 

பதவுரை

அன்று அரு மா நிலம் அளப்பான் குறள் ஆய்

-

முன் பொரு காலத்தில், ஒருவராலும் அளக்கமுடியாத பெரிய பூமியை அளப்பதற்காக வாமந ரூபியாகி

அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி

-

மாவலியென்னு மசுரனுடைய பெரிய யாகபூமியிற் சென்று (மூவடிமண்) யாசித்த பெருமானுடைய திருநாமங்களை வாயராச் சொல்லி

நும்தம் பிறவி துயர்நீங்குதும் என்ன கிற்பீர்

-

உங்களுடைய ஸம்ஸார துக்கங்களைப் போக்கிக் கொள்ள நினைத்திருக்குமன்பர்களே!,

கரு மா கடலுள்

-

கறுத்துப் பெரிய கடலிலே

கவை நா அரவின் அணை பள்ளியின்மேல்

-

இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்

உவந்து கிடந்தான் திருமால்

-

மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால்

திரு மங்கையொடு ஆடு

-

பிராட்டியோடு நித்பவாஸம் பண்ணப்பெற்ற

தில்லை…சேர்மின்கள்-.

 

English Translation

In the yore the lord went to Mabali’s great sacrifices as a manikin and measured the wide Earth. O Devotees who wish to cut the karmas of your miserable birth through chanting his names! Go to Tillai Tiruchitrakudam where the Lord reclines on a serpent couch and resides with the lotus-dame Lakshmi happily.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain