(1160)

வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய் விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,

வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான் அடிப்போ தணைவான் விருப்போ டிருப்பீர்,

பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து படைமன்னவன்பல் லவர்க்கோன் பணிந்த,

செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

வம்பு உண் பொழில் சூழ் உலகு

-

வாஸனை வீசுகின்ற சோலைகளால் சூழப்பட்ட பூமியானது

விரி முதுநீர்வெள்ளம் உள் புக்கு அழுந்த

-

பரந்த கடல் வெள்ளத்தினுள்ளே புகுந்து மூழ்கிப் போக

அன்று

-

அக்காலத்து,

வெம்பும் சினம் புனம் கேழல் ஒன்று ஆய் எடுத்தான்

-

மிக்க கோபத்தை யுடைத்தாய் விலக்ஷணமான காட்டு வராகத் திருவுருவாகி (அப்பூமியை அங்கு நின்றும்) உத்தரிப்பித்துக் கொணர்ந்த பெருமானுடைய

அடி போது அணைவான் விருப்போடு இருப்பீர்

-

பாதாரவிந்தத்தை சாரவேணுமென்னும் ஆசை கொண்டிருக்கும் அன்பர்களே!,

மன்னவன் பல்லவர்கோன்

-

பல்லவ ராஜன்

பை பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

-

அழகிய பொற்பூக்களையும் முத்துக்களையும் மாணிக்கங்களையும் கொண்டு வந்து (ஸமர்ப்பித்து)

படை பணிந்த

-

தனது பரிவாரங்களோடுகூட ஆச்ரயிக்கப்பெற்றதும்

செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

-

அழகிய பொன்னாலும் ரத்னங்களாலும் செய்யப்பட்ட மாடங்களால் சூழப்பட்டதுமான

தில்லை…சேர்மின்கள்-.

 

English Translation

The angered Lord came as a wild boar and lifted the freshly decked Dame Earth who was held captive in the ocean. Those who wish to attain his lotus feet, Hearken! Go to Tillai Tiruchitrakudam surrounded by gold-and-gem mansions, where the crowned Pallava king offers worship with gold, gems and pearls.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain