(1150)

வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு

மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல், மொய்கொள்

மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட, செய்ய

தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே.

 

பதவுரை

வையம் ஏழும் உண்டு

-

(பிரளய காலத்தில்)

ஆவிலை வைகிய மாயவன்

-

ஆலந்தளரிலே போதுபோக்கின ஆச்சர்யபூதனும்,

அடியவர்க்கு மெய்யன் ஆகிய

-

தன்னை யடிபணந்தவர்கட்கு உண்மையாக வேலை ஸாதிக்குமவனுமான

தெய்வநாயகன் இடம்

-

தெய்வநாயகப் பெருமானுக்கு உறைவிடம்:

மெய் தருவரை சாரல்

-

அப்பெருமானுடைய திரு மேனியோடொத்த நிறத்ததான மலையின் அருகில்

மொய்கொள் மாதவி செண்பகம் முயங்கிய

-

நெருங்கிய குறுக்கத்திச் செடிகளோடும் செய்பக மரங்களோடும் தழுவிய

முல்லை அம்கொடி ஆட

-

அழகிய முல்லைக்கொடிகள் அசையாநிற்கப் பெற்றதும்

செய்ய தாமரை செழு பணை திகழ்தரு

-

செந்தாமரைபூக்கள் செழத்து வளர்கின்ற  வயல்கள் விளங்கப் பெற்றதுமான

திருஅயிந்திபுரம்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருப்பதியிலுள்ள தெய்வநாயகப் பெருமாளுக்கு (தாஸஸத்யன்) என்றொரு திருநாமமுண்டாகையால் ‘அடியவர்க்கு மெய்யன்’

 

English Translation

The wonder Lord who swallowed the seven worlds and lay on a fig leaf, Deivanayakam, reveals himself to devotees. He resides in Tiruvayindirapuram, where dense Madavi bowers grow over Senbakam trees in the mountain side, the Mullai creeper sways in the wind and the lotus blossoms fill the water tanks brightly.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain