(1008)
அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் அவுணன்
பொங்கவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
பதவுரை
|
அங்கு |
- |
(‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே |
|
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய் |
- |
அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு) |
|
அவுணன் பொங்க |
- |
இரணியன் கிளர்ந்த வளவிலே, |
|
ஆகம் |
- |
அவனது உடலை |
|
வள் உகிரால் |
- |
கூர்மையான நகங்களாலே |
|
போழ்ந்த |
- |
இருபிளவாகப் பிளந்த |
|
புனிதன் இடம் |
- |
பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;- |
|
செம் கண் ஆளி |
- |
(சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை |
|
பை கண் ஆனை கொம்பு கொண்டு |
- |
பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து |
|
பத்திமையால் |
- |
பக்தியினாலே |
|
அடி கீழ் |
- |
(பகவானுடைய) திருவடிகளிலே |
|
இட்டு |
- |
ஸமர்ப்பித்து |
|
இறைஞ்சும் |
- |
ஆச்ரயிக்கப்பெற்ற |
|
சிங்கவேள் குன்றம் |
- |
அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம். |
English Translation
Singavel-Kundram is the place where the pure Lord came as a man-lion,-while the world stood awe-struck,-and tore the Asura Hiranya’s chest with his claws. Red eyed lions offer worship by heaping elephant tusks at his feet with reverence.




