nalaeram_logo.jpg
(812)

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்

இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்

கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்

கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

பதவுரை

விலங்கு

-

நீர் பெருகவொண்ணாதபடி    தடையாயிருக்கிற

மால் வரை

-

பெருப்பெருத்த மலைகளையும்

கரம்

-

பாலைநிலம் முதலிய அருவழிகளையும்

கடந்த

-

(வேகத்திலே) கடந்துகொண்டு வருகின்ற

கால் பரந்த

-

விஸ்தாரமான வாய்க்கால்களையுடைய

காவிரி

-

திருக்காவேரி நதியினுடைய

கூரை

-

கூரைமீது

குடந்தையும்

-

திருக்குடந்தையிலே

கிடந்த ஆறு

-

திருக்கண் வளர்ந்தருளுகிறபடியானது

நடந்த கால்கள் நொந்தவோ

-

உலகளந்த திருவடிகள் நொந்ததனாலோ? (உலகளந்த வீடாய் தீரவோ?)

ஞாலம்

-

பூமிப்பிராட்டியானவள்

நடுங்க

-

(பாதாளத்திலே உருமாய்ந்து நம்மை யெடுக்க வல்லார் ஆருமில்லையே’ என்று) நடுங்கிக் கிடந்த காலத்து)

ஏனம் ஆய்

-

மஹாவராஹமூர்த்தியாகி

இடந்த

-

அப்பூமியை அண்டபித்தியில் நின்றும் விடுவித்து உத்தரிப்பித்த

மெய்

-

திருமேனி

குலுங்கவோ?

-

ச்ரமப்பட்டதனாலோ? (ஏனமாய் உலகிடந்த விடாய்தீரவோ?)

கோனே

-

கோவனே!

எழுந்திருந்து போ

-

(எந்தவிடாய் தீரக் கிடக்கிறாயென்பதை) எழுந்திருந்து அருளீச்செய்க;

வாழி

-

இக்கிடையழகு என்றும் வாழ்க.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி ஆரவாமுதாழ்வார் திருவடிகளிலே அநுபவிக்க இழிந்த இவ்வாழ்வாரை நோக்கி அப்பெருமான் வாய்திறந்து ஒரு வார்த்தை யருளிச் செய்யாமலும் கைகோவி அணைத்தருளாமலும் ஏகாகாரமாகக் கண்வளர்ந்தருளக் காண்மையாலே ‘இது அர்ச்சாவதாரஸமாதி’ என்று இவர் திருவுள்ளம் பற்றாமல், ஏதோ அளவற்ற ச்ரமத்தினால் இப்படி திருக்கண் வளர்ந்தருள்கிறாரென்று அதிசங்கை பண்ணி, “வடிவினையில்லா மலர்மகன் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி” என்கிறபடியே பரமஸுகுமாரமான திருவடிகளைக்கொண்டு உலகங்களை அளந்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ? அன்றி, பூமியைப் பாயாகச்சுருட்டி எடுத்துப் போன ஹிரண்யாக்ஷனை மஹா வராஹமூர்த்தியாய்க் சொன்று அப்பூமியைக் கொணர்ந்து பழையபடி விரித்ததனாலுண்டான ஆயாஸத்தாலோ இங்ஙனே தேவரீர் ஆடாது அசங்காது திருக்கண்வளர்த்தருள்கிறது?; இதை எனக்குத் தெரியவருளிச் செய்யவேணும் என்கிறார்.

உலகளந்த ச்ரமமாகில் திருவடிகளைப் பிடிக்கவும் உலகிடந்த ச்ரமமாகில் திருமேனியைப் பிடிக்கவும் பார்க்கிறார்போலும். (விலங்குமால் இத்யாதி.) பல மலைகளையும் பல பாலை நிலங்களையும் கடந்துகொண்டு,பெருமாளுக்கு கீதோபசாரம் பண்ணவேணுமென்னும் அபிநிவேசத்தாலே காவேரி ஓடி வருகின்றானென்க. எழுந்திருந்து போசு = கண் வளர்ந்த***யின் காரணத்தை சயனித்துக் கொண்டே அருளிச் செய்யலாகாது; என்னுடைய அச்சம் தீரும்படி எழுந்திருந்து அருளிச்செய்யவேணும் என்கிறார். எழுந்திருக்கும்போது உண்டாகக்கூடிய சேஷ்டிதங்களைக் காணவும் அருளிச்செய்யும்போதை ஸ்வரத்தைக்கேட்கவு>ம் விரும்புகிறபடி.

வாழி - ***-***-***- என்று- சித்ரகூடத்திலே திருக்கண்வளர்ந்தருளின இராமபிரானைப் பிராட்டி தட்டியுணர்த்தியெழுப்பினதற்காகப் பின்பு அநுதாபப்பட்டாற்போல், ஆச்சரியமான இந்த சயாத்திருக்கோலத்தைக் குலைத்து அடுத்தக்ஷணத்திலே நாமும் அநுதாபப்படும்படி நேர்ந்துவிடுமோ வென்றஞ்சின ஆழ்வார் வாழியென்று அந்த சயனத்திருக்கோலத்துக்கே உகந்து மங்களாசாஸகம் செய்தருள்கிறார். ஒரு தீங்கு இல்லாமே கண்வளர்ந்தருளுகிற இவ்வழகு நித்யமாய்ச் செல்லவேணுமென்கிறார்.

திருமழிசைப்பிரான் ஆராவமுதாழ்வாரைநோக்கி “கிடந்தவாறெழுந்திருந்து பேசு” என்று பிரார்த்திக்க, பெருமாளும் பந்தபாரதீகனாகையாலே அப்படியே எழுந்திருக்கப்புக அது கண்ட ஆழ்வார் அர்ச்சாவதாரஸமாகி குலைய வொண்ணாதென்று திருவுள்ளம்பற்றி வாழிவாழி என்று மங்களாசாஸநமுகத்தால் அப்படியே கிடந்தருளும்படியை விரும்ப, ஆராவமுதாழ் வாரும் அவ்வண்ணமே தன்னுடைய எழுச்சிமுயற்சியை நிறுத்திக்கொண்டாரென்றும், இப்போதைய அர்சாவதார நிலைமையில் இவ்வம்சம் விளங்குமாறு உதாந†யியாக ஸேவைஸாதிப்பதும் இதுபற்றியேயென்றும் பெரியோர் ஐதிஹ்யங்கூறக்கேட்டதுண்டு. (சுக)

English Translation

Is it because your feet are hurt, is it because your body aches, -- through feat of traversing the earth, you lie amid the Kaveri that fans out in Kudandai plains? Pray rise O Lord and speak a word, O Kesava, my Wonder Boar!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain