(724)

சுற்றம் எல்லாம் பின் டிதாடரத் தொல் கானம் அடைந்தவனே!

அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!

சிற்றவைதன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ!

 

பதவுரை

சுற்றம் எல்லாம் பின் தொடர

-

எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்துவர

தொல்கானம் அடைந்தவனே

-

புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!

அற்றவர்கட்கு

-

உனக்கே அற்றுத்தீர்ந்த பரம பக்தர்களுக்கு

அரு மருந்தே

-

ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!

அயோத்தி நகர்க்கு அதிபதியே

-

அயோத்யா நகரத்திற்கு அரசனே!

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து

-

ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

-

நீலமணிபோலழகிய எம்பெருமானே!

சிற்றவை தன்

-

சிறிய தாயாராகிய கைகேயியினுடைய

சொல் கொண்ட சீராமா

-

சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!

தாலேலோ -

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராமன் காட்டுக் கெழுந்தருளுகையில் பிரஜைகள் மாத்திரமே பின் தொடர்ந்ததாக ஸ்ரீராமாயணத்திற் கூறாநிற்க; இங்கு சுற்றமெல்லாம் பின் தொடரத் தொல்கான மடைந்தவனே என்றருளிச்செய்தது சேர்வதெங்ஙனே? என்று எம்பெருமானார் திருவோலக்கத்தில் ப்ரஸ்தாவம் நிகழ, அதற்கு எம்பெருமானார் அருளிச் செய்தது - அஹம் ஸர்வம் கரிஷ்யாமி என்று சொன்ன எல்லாவடிமையும் செய்யு மிளையபெருமாள் கூடப்போகையாலே எல்லா பந்துக்களும் கூடப்பேனார்களாய்த்திறே என்றாம். இது ரஸோக்தியாக அருளிச் செய்தபடி.

அற்றவர்கள்  ???????????????????? (ஸ்ரீராமா ?????????) என்று சரபங்காச்ரமத்தில் வந்து கதறின தண்டகாரண்ய வாஸிகளான முனிவரைச் சொல்லுகிறது. அங்ஙனம் வந்து வேண்டிக் கொண்ட முனிவர்களை நோக்கி “அப்படியே நான் உங்கள் விரோதி வர்க்கங்களை வேரறத் தொலைத்து விடுகிறேன், அஞ்சேல்மின்” என்று உறுதிமொழி கூறிய இராமபிரான் அந்தப் பிரதிஜ்ஞையை நிறைவேற்றுதற்பொருட்டு தண்டகாரணியத்திற்குப் புறப்படுங்கால் பிராட்டி பெருமாளை நோக்கி “ஆரியரே! தாபஸவ்ருத்தியை அவலம்பித்து வந்து சேர்ந்தவிடத்தில் க்ஷத்ரியவ்ருத்தியைப் பாராட்டக் கருதுவது உமக்குத் தகுதியல்ல; உமது விஷயத்தில் ஒரு குற்றமுஞ் செய்யாத பிராணிகளை நீர் கொல்ல முயல்வது அநியாயமாகும்” என்று பலவாறாக உணர்த்த; அது கேட்ட இராமபிரான் - “ஸுதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்; யாருக்காவது பிரதிஜ்ஞை செய்துகொடுத்து அதிலும் பிரமஞானிகளுக்குப் பிரதிஜ்ஞை செய்து கொடுத்து அதை மாத்திரம் நிறைவேற்றாது விடவேமாட்டேன்; ரிஷிகள் தாம் என்னிடம் வந்து முறையிடாமற் போனலுங்கூட அவர்களை ஸம்ரக்ஷிப்பது எனது கடமை; பிரதிஜ்ஞையும் பண்ணிக் கொடுத்துவிட்ட பின்னர் இனி நான் தவறக்கூடுமோ!” என்று சரக்கற வார்த்தை சொல்லி அம்முனிவர்களைக் காத்தருளினவாறு கூறும் “அருமருந்தே!” என்னும் விளி.

 

English Translation

Sleep, O Srirama, Talelo! My dark gem-Lord of Kannapuram, where learned ones live! Obeying your stepmother’s command, you went into the deep forest followed by you kith and kin. O Precious medicine for devotees! You are the Emperor of Ayodya city.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain