(721)

கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்*

தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ*

கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே*

எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.

 

பதவுரை

கொங்குமலி கருகுழலாள்

-

பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலையுடையளான

கௌசலை தன்

-

கௌஸல்யையினுடைய

குலம் மதலாய்

-

சிறந்த பிள்ளையானவனே!

தங்கு பெருபுகழ் சனகன்

-

பொருந்திய மஹாகீர்த்தியையுடைய ஜநக மஹாராஜனுக்கு

திரு மருகா

-

மாப்பிள்ளை யானவனே!

தாசரதீ

-

சக்ரவர்த்தி திருமகனே!

கங்கையிலும்

-

கங்காநதியிற் காட்டிலும்

மலி தீர்த்தம்

-

சிறப்பு மிக்க தீர்த்தங்களையுடைய

கணபுரத்து

-

திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

எங்கள் குலம்

-

எங்கள் ராஜவம்சத்துக் கெல்லாம்

இன் அமுதே

-

போக்யமான அமுதம் போன்றவனே!

இராகவனே! தாலேலோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எங்கள் குலத்து இன்னமுதே - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.

 

English Translation

Sleep, Sweet nectar, our tutelary deity, Raghava, Talelo, my Dark-gem-Lord of Kannapuram with rivers holier than the Ganga! You are the son of Dasaratha, son-in-law of Janaka -king of lasting fame. You are the emancipator of the lineage of fragrant dark-coiffured Queen Kousalya.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain