(719)

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

 

பதவுரை

மன்னுபுகழ்

-

நிலை நின்ற புகழையுடைய

கௌசலை தன்

-

கௌஸல்யையினுடைய்

மணி வயிறு

-

அழகிய வயிற்றிலே

வாய்த்தவனே

-

பிள்ளையாகத் திருவவதரித்தவனே!

தென் இலங்கை கோன்

-

தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய

முடிகள்

-

பத்துத் தலைகளையும்

சிந்துவித்தாய்

-

சிதறப் பண்ணினவனே!

செம் பொன் சேர்

-

செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்

கன்னி

-

அழிவில்லாததாய்

நல்

-

விலக்ஷணமாய்

மா

-

பெரிதான

மதில்

-

திருமதிளாலே

புடை சூழ்

-

நாற்புறமும் சூழப்பட்ட

கணபுரத்து

-

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற

என் கருமணியே

-

நீலரத்நம் போன்ற எம்பெருமானே!

என்னுடைய இன்அமுதே

-

எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!

இராகவனே!

-

ஸ்ரீராமனே!

தாலேலோ

-

(உனக்குத்) தாலாட்டு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க. கணபுரம் - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் இது. தாலேலோ - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால் - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் இத்தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.

 

English Translation

Sleep, my sweet child Raghava, Talelo! My Dark-gem-Lord of Kannapuram, surrounded by high stone walls inlaid with gold! You are the jewel of the precious womb of world-famous Kousalya. You severed the heads of Lanka’s king Ravana.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain