தள அறிமுகம்

அன்புடையீர்!

திராவிட வேதா எனும் இந்த தளத்தில் நாலாயிர திவ்வியபிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களும் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை , விளக்க உரை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவை கொடுக்கப் பட்டுள்ளன. விளக்க உரையாக ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின் உரை வழங்கப் பட்டிருக்கிறது.

தளத்தின் வலது புறம் ஸ்ரீ நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் தலைப்பில் உள்ளடக்கத்தின் கீழ் ஸ்ரீ ஆழ்வார்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பெயரையும் அழுத்த , அந்த குறிப்பிட்ட ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களின் தலைப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த தலைப்புகளை அழுத்த, அவைகள் பாசுரங்களாக விரியும். ஒவ்வொரு பாடலுக்கும் அருகில் விளக்க உரை எனும் தொடர்பு  இருக்கும். அதை அழுத்த  பதவுரை, தெளிவுரை, விளக்க உரை, ஆங்கில மொழி பெயர்ப்பு ஆகியவைகளை கண்டடையலாம்.

இந்தத் தளத்தின் மேலே வலது புறம் ஒரு தேடு பொறியும் அமைக்கப் பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பாசுரத்தின் எண் அல்லது ஒரு வாக்கியம் அல்லது ஒரு வார்த்தை இப்படி ஏதாவது ஒன்றைக் கொண்டு தேடினால் அதற்கான பக்கங்களை, பாசுரங்களை சென்றடையலாம்.

இந்த தளத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் வண்ணம், 108 திவ்ய தேசங்கள் பற்றிய செய்திகள், ஆழ்வார்கள் வரலாறு,வைணவ ஆச்சார்யர்கள் பற்றிய வரைபடம், போன்றவைகளும் வழங்கப் பட்டுள்ளன.

வைணவம், மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பற்றிய கட்டுரைகள் இந்த தளத்தில் இடம் பெறச்செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. வைணவம் சார்ந்து இயங்கும் ஆன்மிக நண்பர்கள், திவ்ய பிரபந்தம் சார்ந்து இயங்கும் இலக்கிய ஆர்வலர்கள் இந்த தளத்திற்கு கட்டுரைகள் தந்து உதவலாம். இந்த தளம் எந்த வர்த்தக நோக்கமும் இல்லாத தளம் என்பதால் கட்டுரைகளுக்கு பணமாகவோ அன்பளிப்பாகவோ எதுவும் தர இயலாது. நண்பர்கள் ஆன்மிக அல்லது இலக்கிய, அல்லது தமிழ்ப் பணியாக கருதி மட்டுமே கட்டரைகள் அனுப்ப வேண்டுகிறோம்.

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

உங்களின் அன்பையும் ஆதரவையும்  எதிர்பார்த்து நிற்கிறோம்.

 

மிக்க அன்புடன்

திரவிடவேதா தள நிர்வாகிகள்.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain