நன்றி


ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இவ்விணைய தளத்திற்கு ஆதாரம் ஒன்றே. அதுவே ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின் நாலாயிர திவ்விய பிரபந்த உரை. இந்த ஜகத்குருவாகிறவர் ஒருவரே தமிழிலும், தெலுங்கிலும் தன் கருணையால் உரை எழுதியிருக்கிறார். தமிழின் உரை நமக்கு எளிதாகக் கிடைத்தது. தெலுங்கின் உரை கிடைத்தற்கரிதாகவுள்ளது. இவ்வுரையின் ஏற்றமென்னவென்றால் எந்த ஐயத்திற்கிடமின்றி ஒரே கருத்தாக நாம் பாசுரத்தை அறியலாம். மற்ற உரைகள் உள் ஆழம் தமிழில் இருக்கலாமொழிய பக்தியில் இருக்குமாவென்பது சந்தேகமே. ஆதலால் பக்திக்கு முதற்படியாக நாம் இவ்வறிவைக் கொள்ளலாம். இம்மாபெரும் ஆச்சாரியருக்கு நாம் செய்யும் நன்றி அவர் கொடுத்த இப் பாசுரங்களைப் படித்து ஸ்ரீமன் நாராயணனை அறிவதும் பணிவதுமாகும்.

ஆங்கில உரை, ஸ்ரீ ராம பாரதி ஸ்வாமிகளின் புத்தகத்திலிருந்து. இந்த ஸ்வாமிகளின் ஆங்கில பதவுரை நமக்கு ஒரு ஆங்கில முன்னோட்டமாக இங்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாசிரியர்கள் நமக்கு அளித்த இப்பொக்கிஷங்களுக்காக அவருக்கு நாம் செய்யும் கைம்மாறு என்பது அதை நாள் தோறும படிப்பதே. இவைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை என்றும் ஈடாகாது.

ஸ்ரீ ராம பாரதி அரையர் ஸ்வாமிகள்

 

இத்தளத்தை இன்று நம்மைக் காணச்செய்த பெருமை பர்பிள் ரெயின் மீடியா சொல்யூஷன்ஸ் திரு. பிரபாகர் ஐயா அவர்களையே சாரும். அறிவும், ஆர்வமும், விடாமுயற்சியும்  கொண்டு இம்மாபெரும் தளத்தை உருவாக்கி "அறிவு" காண்கிறார். அவருடைய முயற்சிகள் என்றும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

ஸ்ரீ ஆச்சாரியாரின் மணிப்பிரவாள நடை கண்டு மிரளாமல் தட்டச்சு செய்த திருமதி. சௌம்யா தேவி, செல்வி. ஜெபினா அவர்களுக்கும் மிக்க நன்றி.

இது மற்றொரு இணைய தளம் என்றில்லாமல் இதற்கொரு தனித்தன்மை கொடுத்து உயிரூட்டிய திரு. ப.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும், அவ்வெல்லா நாலாயிரமும் சரியான இடத்தில் இருந்து நாம் தேடும்பொழுது சுணங்காமல, சடாரென்று முகர்ந்து கொணரவைத்த தொழில் நுட்ப வல்லுனர்கள் (developers) திரு. அ.மனோஜ் குமார்(B.Tech) அவர்களுக்கும், திரு. மு.இராமானுஜம்(B.Tech) அவர்களுக்கும், இவர்களின் தொழில்நுட்ப மேலாளர் திரு.முகமது சாதிக் அவர்களுக்கும் மிக்க நன்றி.

ஆச்சாரியாரின் நடையை ரசித்து, அதில் ஒரு ஆய்வு செய்யும் அளவிற்குச் சென்று பிழை திருத்தம் செய்து உதவிய திரு. பால் நிலவன் ஐயா அவர்களுக்கும் நமது நன்றி உரித்தாகிறது.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain