(3768)

அன்றிமற் றோருபாய மென்னிவ ளந்தண்டு ழாய்கமழ்தல்,

குன்ற மாமணி மாடமாளிகைக் கோலக்கு ழாங்கள்மல்கி,

தென்தி சைத்தில தம்புரைக் குட்டநாட்டுத் திருப்பூலியுர்,

நின்ற மாயப்பி ராந்திரு வருளாமிவள் நேர்ப்பட்டதே.

 

பதவுரை

இவள் அம் தண் துழாய் கமழ்தல்

-

இத்தலைவி அழகிய குளிர்ந்த திருத்துழாய்ப் பரிமளம் கமழப்பெற்றிருப்பதற்கு

அன்றி மற்று ஓர் உபாயம் என்

-

இப்போது நான் சொல்லப்போகிற காரணமொழிய வேறு என்ன காரணமிருக்க்க்கூடும்?

(அஃது என்ன வென்றால்)

குன்றம் மா மணி மாடம் மாளிகை கோலம் குழாங்கள் மல்கி

-

குன்றம்போல் சிறந்த மணிமாட மாளிகைகளின் அழகிய திரள்கள் நெருங்கப்பெற்று

தென்திசை திலகம் புரை

-

தென் திசைக்குத் திலகம் போன்றுள்ளதான

குட்டநாடு திருப்புலியூர்

-

திருப்புலியூரிலே

நின்ற

-

எழுந்தருளியுள்ள

மாயன் பிரான்

-

மாயப்பெருமானுடைய

திரு அருள் இவள் நேர்பட்டது ஆம்

-

திருவருளை இத்தலைவி பெற்றிருத்தல் வேண்டும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்தலைவி திருப்புலியூர்ப் பெருமானுடைய கலவியைப் பெற்றாளென்னுமிடத்திற்கு ஒருவிதமான அந்யதாஸித்தியும் சொல்லமுடியாத நல்லடையாளமுண்டென்று மூதலிக்கிறாள் தோழி. இவள் அந்தண்டுழாய்கமழ்தல் அன்றிமற்றோருபாயமேன்? –இவளுடம்பிலே திருத்துழாய்ப்பரிமளம் கமகமவென்று கமழின்றபடியைக் கண்டீர்களில்லையோ? இவளுடம்பிலேயிலாவது உங்களுடம்பிலாவது திருத்துழாய் நாறுகின்றதோ? எம்பெருமானுடைய திருமேனியில் அணைந்தால்ல்லது திருத்துழாய் கமழ ப்ரஸக்தியுண்டோ? “ராஜபுத்ரனை யணையாதார்க்குக் கோயிற்சாந்து நாறுகைக்கு விரகுண்டோ?“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

இவளுடம்பில் திருத்துழாய் கமழ்வரும் நிச்சயிக்கப்படுமது என்னென்ன, மேல் மூன்றடிகளாலும் அது சொல்லப்படுகிறது. மலைபோலே அசைக்கமுடியாத மாடங்களும் மாளிகைகளும் திரள் திரளா மிக்கு, தென்திசைக்குத் திலகம்போல் விளங்காநின்ற குட்டநாட்டுத் திருப்புலியூரிலே நின்ற மாயப்பிரானுடைய திருவருளுக்கே இவள் இலக்காயின ளென்பது நிச்சயிக்கத் தட்டுண்டோ? இது நீங்களும் இசையத்தக்க நல்லடையாளமன்றோ என்று தோழித் சொல்லித் தலைக்கட்டினாளாயிற்று.

ஆக இந்த அந்யாபதேசப் பாசுரங்களினால் ஆழ்வாருடைய அந்ந்யார்   த்வம் திடப்படுத்தப்பட்டதாயிற்று.

 

English Translation

Or else how does her person waft the fragrance of Tulase? She surely has received the favours of the Tiruppuliyur Lord, who stands as a beacon in the Southern Kuttanadu, amid beautiful jewelled mansions rising by the score

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain