(3766)

மடவரல் அன்னைமீர்கட் கெஞ்சொல்லிச் சொல்லுகேன்? மல்லைச்செல்வ

வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய்யழல் வான்புகைபோய்

திடவிசும் பிலமரர் நாட்டை மறைக்கும்தண் திருப்பூலியுர்,

படவர வணையான் றன்நாமம் அல்லால் பரவா ளிவளே.

 

பதவுரை

அன்னைமீர்கட்கு மடவரல் என் சொல்லி சொல்லுகேன்

-

தாய்மாரான உங்களுக்கு இவளது நலத்தைப்பற்றி என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்,

மல்லை செல்வம் வடமொழி மறைவாணர்

-

மஹாஸம்பந்நர்களான ஸம்ஸ்க்ருத வேதாத்யயன பர்ர்களினுடைய

வேள்விபுள்

-

யாகங்களிலே

நெய் அழல் வான் புகை

-

நெய்யிடப்பெற்ற அக்னியினுடைய பெரிய புகையானது

போய்

-

கிளம்பிச்சென்று

திடம் விகம்பில் அமர்ர் நாட்டை மறைக்கும்

-

திடமான ஆகாசத்தில் தேலோகத்தை மறைக்கும்படியான

தண் திருப்புலியூர்

-

குளிர்ந்த திருப்புலியூரிலே

படம் அரசு அணையான் தன் நாம்ம் அல்லால்

-

படமொடுத்த அரவாகிற சயன்த்திலே சயனித்தவனுடைய திருநாம்மல்லது (வேறொன்றையும்)

இவள் பரவாள்

-

இத்தலைவி சொல்லுகின்றிலள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருப்புலியூரின் வைதிகஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி. தாய்மார் தோழியை நோக்கி “இப்பெண்பிள்ளை நாங்கள் உன்கையில் காட்டிக்கொடுத்திருக்க, இவள் அதிப்ரவ்ருத்தி பண்ணும்படி நீ எங்ஙனே விட்டிருந்தாய்? என்று கேட்க, அதற்குத் தோழி உத்தரங் கூறுகின்றாள் போலும் –அன்னைமீர்கட்கு என் சொல்லிச்  சொல்லுகேன்? –இவள் எனக்கு விதேயை என்று சொல்லுவேனோ? இவளுடைய அதிப்ரவ்ருத்திக்கு நானும் கூட்டாயிருந்தேனென்று சொல்லுவேனோ? இவள் என்னைக் கடந்து போனாளென்று சொல்லுவேனோ? என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்? எனக்கொன்றும் தெரிகிறதில்லையேயென்று கையைப் பிசைகிறாள் தோழி.

மல்லைச்செல்வ வடமொழி மறைவாணர் –தமிர்வேத்த்தில் ஊன்றியிருக்குமிவள் வடமொழிவேதம் வல்லார் வாழுமிடத்திலே ப்ரணையானாள். தமிழ்வேத்த்திற்கு நோக்கு அர்ச்சாவதார கைங்கரியம், வடமொழி வேத்த்திற்கு நோக்கு தேவதாந்தர்யாமிஸமாராதனம், அதாவது யஜ்ஞயாகாதிகள். அவ்வடமொழி வேதம் வல்லவர்கள் நெருப்பிலே நெய்யைக் கொட்டி ஹோமங்கள் பண்ண, அதினின்று கிளம்பின பவித்திரமான புகையானது விண்ணுலகமளவும் வளர்ந்து அங்குள்ள விமானசாரிகளின் கண்ணை மறைக்கின்றதாம், இவ்வதிசயோக்திகளினால் யஜ்ஞயாகங்களின் சிறப்பு தெரிவிக்கப்பட்டதாகும். இப்படிச் சிறப்பாக வைதிக்க்ரியைகள் நடைபெறுமிடமானது திருநாம்மல்லது வேறொன்று சொல்லவறியாதவிவள் அப்பெருமானையே மணவாளனாகக் கொண்டாளென்னுமிடத்து ஐயமுண்டோ.

 

English Translation

O Ladies!  How can I make you understand? Good scholars of the Sanskrit Vedas feed the fire whose smoke clouds the land of the celestials in cool Puliyur, home of the serpent recliner, she only prates his names forever

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain