(3763)

புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புதுக்க ணிப்பும்,

நினையும் நீர்மைய தன்றிவட்கிது நின்று நினைக்கப்புக்கால்,

சுனுயி னுள்தடந் தாமரை மலரும்தண் திருப்புலியுர்,

முனைவன் மூவுல காளியப்பன் திருவருள் மூழ் கினளே.

 

பதவுரை

புனை இழைகள் அணிவும்

-

ஆபரணங்கள் பூணும்மழகும்

ஆடை உடையும்

-

சேலையுடுக்குமழகும்

புதுக்கணிப்பும்

-

வடிவில் பிறந்த புதுமையும்

இவட்கு நின்று நினைக்க புக்கால்

-

இத்தலைவிக்கு இருக்கும்படியை ஆராய்ந்தால்

இது நினையும்

-

இந்த வைலக்ஷண்யம் நீர்மையது அன்று

இந்த வைலக்ஷண்யம் (லோகமர்யாதையில் நினைக்கக் கூடியதாக இல்லை, (ஆதலால்)

சுனையினுள் தட தாமரை மலரும்

-

சுனைகளுக்குள்ளே பெரிய தாமரைகள் மலரப்பெற்ற

தண் திருப்புலியூர்

-

குளிர்ந்த திருப்புலியூர்க்குத்

முனைவன்

-

தலைவனும்

மூ உலகு ஆளி அப்பன்

-

த்ரிலோகாதிபதியுமான எம்பெருமானுடைய

திரு அருள் மூழ்கினள்

-

திருவருளிலே இவள் அவகாஹிக்கப் பெற்றிருக்கவேண்டும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று.

தோழியானவள் தலைமகளிடத்து மூன்று விசேஷங்களை யெடுத்துச் சொல்லி, இவளுக்கு திருப்புலியூர்ப் பெருமானோடு கல்வி நேர்ந்திராவிடில் இங்ஙனே காணவொண்ணாது என்று தன்னுடைய அநுமானத்தைத் திடப்படுத்துகின்றாள். புனையிழைகளணிவும் –ஆபரணங்கள் பரம் பூட்டினாப்போலே யிருந்த்தோ? அப்படியில்லையே, கலைத்துப் பூண்டபடி காணா நின்றதே. ஆடையுடையும் –கூறையுடையும் நாமுடுத்தினபடியில்லையே, முகத்தலைபார்த்து உடுத்ததாயோ இருக்கிறது? வேறுபாடு தெரியவில்லையா? புதுக்கணிப்பும் –இவளது வடிவிலே பிறந்த புதுமைகள் தெரியவில்லையோ? இதற்கு முன்பு கோடையோடின வயல்போலே யன்றோ இருந்தது, இப்போது நீர்பாய்ந்த வயல்போலே காண்கிறதில்லையோ? நின்று நினைக்கப்புக்கால் நினையும் நீர்மையதன்று இவட்கிது –எம்பெருமானுடைய படிகளையே நினைக்கமுடியாதபோது அவன் திறத்திலீடுபட்டாருடைய படிகள் நினைக்கப்போமோ? * நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணேயூணென்று மீனச்சொல்லே * என்ற திருவாக்கினாலேயே இப்பாசுரமும் வெளிவந்தபடி பாரீர்.

ஆக, புனையிழைகளணிவும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் பார்க்குமிடத்து, திருப்புலியூரப்பன் திருவருட்கடலில் மூழ்கினவளே யிவளென்று நிலையிடத்தட்டில்லை யென்றதாயிற்று.

 

English Translation

The jewels and the dress the wears, the joy in her face, -ever wondered where they came from ? Oh, it is unthinkable ! In the cool tank of Tiruppuliyur, where a large lotus blooms, she immersed herself in the grace of the Lord of the worlds!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain