(1991)

கொலைகெழு செம்மு கத்த களிறொன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா

சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்

கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,

ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே.


பதவுரை

கொலை கெழு

கொலை செய்யுமியல்வு விளக்கப் பெற்ற

செம் முகத்த

சிவந்த முகத்தையுடையத்தாயக் கொண்டுவந்த

களிறு ஒன்று

(குவலயாபீடமென்னும்) ஒரு யானையை

கொன்று

கொன்றொழித்தவனாயும்

கொடியோன்

கொடியவனான இராவணனுடைய

பொடி ஆ

பொடியாகும்படி

சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த

வில்லிலுள்ள நெருப்புப் போன்ற அம்புகளைப் பிரயோகித்தவனாயுமுள்ள

நங்கள் திருமாலை

எம்பெருமானைக் குறித்து,

வேலை புடை சூழ

கடலாலே சுற்றுஞ் சூழப்பட்டதாய்

கலி கெழு மாடம் வீதி

வலிமைமிக்க மாடவீதிகளை யுடையதாய்

வயல்

கழனிகளையுடைத்தான

மங்கை

திருமங்கைநாட்டிலே

மன்னு

பொருந்திவாழ்கிற

கலிகன்றி

ஆழ்வார்

சொன்ன

அருளிச்செய்த

பனுவல்

ஸ்ரீஸூக்தியாய்

ஒலி கெழு

சொற்கள் சிறந்த

பாடி

வாயாரப்பாடி

உழல்கின்ற

இதுவே போதுபோக்காய்த் திரிகின்ற

தொண்டர் அவர்

பாகவதர்கள்

உம்பர் உலகு

பரமபத்த்தை

ஆள்வர் -

ஆளப்பெறுவர்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் இங்ஙனே பலபல திருவவதாரங்கள் செய்தருளி யிருந்தாலும் ஸ்ரீக்ருஷ்ணாவதாரமும் ஸ்ரீராமாவதாரமும் நெஞ்சுக்கு இனியவை என்பது தோன்றுமாறு இந்த நிகமனப் பரசுரத்தில் அவ்விரண்டவதாரங்களை யெடுத்துப் பேசுகிறாரென்க. கம்ஸனது குவலயாபீட மதயானையைக் கொன்றொழித்தவனும் இலங்கை பாழாளாகப் படை பொருதவனுமான எம்பெருமானைக் குறித்துக் கலியன் திருவாய்மலர்ந்தருளிய இத்திரு மொழியைப் பாடித்திரிகின்ற தொண்டர்கள் பரமபதத்தைப் பெற்று அநுபவிப்பார்க்ள் என்று பயனுரைத்தாராயிற்று.

(வேலைபுடைசூழ்) திருமங்கைநாட்டுக்குக் கடல் அணித்தாக இல்லாமையாலே ‘வேலை’ என்பதற்குக் கடல் என்று பொருள் கொள்ளாமல் கடல்போன்ற காவிரிநதி யென்று பொருள் கொள்ளலாமென்பர்சிலர்; அது வேண்டா; “வேலை மோதும் மதில்சூழ் திருக்கண்ணபுரம்” என்றிவடங்களுக்குக் கூறும் சமாதானம் இங்கு மொக்கும்.

 

English Translation

This garland of sweet tamil sangs! by well-laid out Mangai city;s king, Kalikanri sings of our Lord Tirumal who killed the deathly rutted elephant, and who entered the wicked king;s Lanka and burnt it to ashes with his flery arrows.  Devotees who go about singing these songs will rule the world of celestials.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain