(1990)

துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய

உணமுலை முங்கொடுத்த வுரவோள தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,

பணமுலை யாயர் மாத ருரலோடு கட்ட அதனோடு மோடி அடல்சேர்,

இணைமரு திற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.

 

பதவுரை

தொண்டர்

பாகவதர்காள்

எமக்கு மற்று ஓர்அணைநிலை உனது என்று இராது

நமக்கு வேறொரு ஆச்ரயமுண்டு என்று நினைத்திராமல்

தொழுமின்கள்

எம்பெருமானை வணங்குங்கோள்

முன்

முன்பொருகால்

தோலைய

(கண்ணன்) முடிந்துபோக வெணுமென்றெண்ணி

உண

அவன் உண்ணும்படியாக

முலை கொடுத்த

(நஞ்சுதீற்றியதனது) முலையை (வாயில்) கொடுத்த

உரவோனது

வன்னெஞ்சினளான பூதனையினுடைய

ஆவி உக

உயிர்மாளும்படி

உண்டு

ஸ்தந்யபானம்பண்ணி

வெண்ணெய் மருவி

வெண்ணெயை ஆசைப்பட்டு (க் களவு செய்ய)

பணைமுலை ஆயர்மாதர்

பருத்தமுலையையுடையளான யசோதைப் பிராட்டியானவள்

உரலோடுகட்ட

உரலோடே பிணித்துவைக்க

அதனோடும் ஓடி

அவ்வுரலையுமிழுத்துக் கொண்டோடி

இணை மருது

இரட்டைமருதமரங்கள்

இற்று வீழ

முறிந்துவிழும்படியாக

நடை கற்ற

நடைபயின்ற

தெற்றல்

தெளிவுள்ள சிறுகுழந்தை

வினை பற்று அறுக்கும்

(நமது) ப்ரபங்களை வாஸனையோடே பொக்கியருளும்

விதியே

இது திண்ணமே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தொண்டர்= அண்மைவிளி.

உண-உண்ண. உரவோள்-வலிய நெஞ்சுடையவள். தெற்றல்-தெள்ளியவன்.

 

English Translation

Devotees! Worship the Lord as the sole refuge. Long ago when an ogress came to kill Krishna, the child sucked her poison breast and her life too with it.  He stole butter and Dame Yasoda bound him to a mortar. He toddled with the mortar trailing behind him, entered between two cloely-growing Marudu trees, and broke them, In how many ways the Lord rids us of our Karmas!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain