(1988)

இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் என்ன இனமாய மான்பின் எழில்சேர்

அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப தற்கொ ருருவாய மானை யாமையா,

கொலைமலி யெய்து வித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்,

சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த நங்கள் திருமால் நமக்கொ ரரணே.

 

பதவுரை

இலைமலி பள்ளி எய்தி

பர்ணசாலையினருகே வந்து

எழில் சேர்

மிக்க அழகையுடையளாய்

ஆலை மலி வேல் கணாளை

துன்பப்படுத்துமியல்வு பொருந்திய வேல் போன்ற திருக்கண்களை யுடையளான பிராட்டியை

அகல்விப்ப     தற்கு

பிரிப்பதற்காக

இனம் ஆய மான் பின்

ஸஜாதியமான மான்களின்பின்னே

இதுமாயம் என்ன

இது ஆச்சரியமான மான் என்று சொல்லும்படியாக

ஓர்உரு ஆய

விலக்ஷணமான ரூபத்தை யேறிட்டுக்கொண்டு வந்த

மானை

(மாரீசனாகிற) மாயமானை

அமையா

நிரஸித்து

கொலைமலிவு எய்துவித்த     கொடியோன்

பரஹிம்ஸையையே தன்னிடத்துப் பூர்த்தியாகக் கொண்டிருந்தகொடியவனான இராவணனுடைய

இலங்கை

லங்காபுரியானது

பொடி ஆக

பொடிபடும்படி

வென்றி அமருள்

வெற்றிப்போர்க்களத்திலே

சிலை மலி செம் சரங்கள்

வில்லிலே நிறைந்த செவ்வியஅம்புகளை

செல உய்த்த

பிரயோகித்த

நங்கள் திருமால்

எம்பெருமான்

நமக்கு ஓர் அரண்

நமக்கு ஒப்பற்ற சரண்யன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீராமாவதாரத்தைப் பற்றிப் பேசும் பாசுரம் இது. மாயமான் வடிவெடுத்து வந்த மாரீசனையும் இராவணனையும் கொன்றொழித்த வரலாறுகள் இதிற் கூறப்பட்டன.

 

English Translation

The wicked Ravana came to the forest hut when the beautiful sharp-eyed Sita was alone, and abducted her.  Our Lord Tirumai singled out the wonder-deer from the heart and killed it. He then rained fire-spitting arrows over the Rakshasa;s Lanka hount and routed the city. That Avatara is our protector and king.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain