(1985)

தளையவிழ் கோதை மாலை யிருபால் தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,

அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்க ளவிழ,

வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன தாகம் மதியாது சென்றொ ருகிரால்

பிளவெழ விட்ட குட்ட மதுவைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே.

 

பதவுரை

அன்று

முன்பொரு காலத்தில்

தளை அவிழ் கோதை மாலை

கட்டுஅவிழ்கின்ற (விகஸிக்கின்ற) பூமாலையானது

இருபால்

இரண்டு பக்கத்திலும்

தயங்க

அசைந்து விளங்க

எரிகான்ற

அழலை உமிழா நின்றுள்ள

இரண்டு தறுகண்

வட்டணித்த இரண்டு திருக்கண்களும்

அளவு எழ

அளவு கடந்து மலர(ப்பெற்ற)

வெம்மைமிக்க அரி ஆகி

பயங்கரமான நரஸிம்ஹரூபியாய்

பாரியோன்

ஸ்தூலகாயனான இரணியனுடைய

சினங்கள்

பவகத் பாகவத விஷயங்களிலுண்டான மாச்சாரியமெல்லாம்

ஆவிழ

குலையும்படியாக

வளைஉகிர் ஆளி

வளைந்த திருநகங்களை யுடையனாயக் கொண்டு

மொய்ம்பில் மறவோனது

வலிமையோடு கூடித் வேஷத்தை யுடையனான இவ்விரணியனது

ஆகம்

உடலை

மதியாது சென்று

ஒருபொருளாக நினைக்காமல்கிட்டி

ஒரு உகிரால்

ஒரு திருநகத்தாலே

பிளவு எழ இட்ட

இரண்டு பிளவாம்படி செய்ததனாலுண்டான

குட்டம் அது

ரக்தமடுவானது

வையம்

இவ்வுலகத்தையெல்லம்

மூடு

வியாபிக்கின்ற

பெரு நீரில்

பிரளயப் பெருவெள்ளத்திற் காட்டில்

மும்மை பெரிது

மும்மடங்கு பெரிதாயிருந்தது!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரஸிம்ஹாவதாரத்தை அநுபவித்துப் பேசுகிறார். ஆச்ரித விரோதியான ஹிரண்யகசிபுவுக்குக் குடல் குழம்பும்படி பயங்கரமான வடிவத்தை ஏற்றுக்கொண்டு வரச் செய்தேயும் பக்தசிகாமணியான ப்ரஹலாதாழ்வானுக்குக் கண்குளிர ஸேவைஸாதிக்க விரும்பிப் பரமபோக்யமான பூமாலையை அணிந்துகொண்டு வந்து தோன்றினன் நரஸிம்ஹ பகவான் என்கிறார் தளையவிழ் கோதைமாலை இருபால் தயங்க; என்றதனால். ‘தலையவிழ்’ என்றது விகஸித்தலைச் சொன்னபடி. “கட்டு நெதிழா நின்றுள்ள தொடைகொள்மாலை பூமாலை யென்னுமிவை இரண்டருகும் அசைந்துவர” என்பது வியாக்கியான வருளிச்செயல்.

எரிகான்ற+இரண்டு, எரிகான்றிரண்டு; தொகுத்தல். உண்டான சீற்றம் ப்ரஹ்லாத விரோதியான இரணியனளவில் மாத்திரமேயன்றி ‘உலகங்கட்கெல்லாம் இப்போதே உபஸம் ஹாரம் விளைந்திடுமோ!’ என்று அனைவரும் அஞ்சி நடுங்கும்படி அளவுமீறி யிருந்ததனால் ‘அளவெழ வெம்மைமிக்க அரியாகி’ என்றது.

‘பாரியோன் சினம் அவிழ’ என்னாதே ‘சினங்கள்’ என்று பன்மையாகச் சொன்னது இரணியனுக்கு பகவத் பாகவத விஷயங்களில் பலவகைப்பட்ட சீற்றம் இருந்தமையைக் காட்ட.

‘விளையுகிராளி’ என்றது நரஸிம்ஹமூர்த்திக்கும் விசேஷணமாகலாம் இரணியனுக்கும் விசேஷணமாகலாம். வுளைந்த நகங்களை யுடைத்தாயிருக்கை அசுரனுக்கும் சிங்கத்துக்கும் ஒக்கும்.

இரணியனுடைய மார்பை இருபிளவாகக் கிழித்தபோது உண்டான ரக்தப்பெருக்கு மஹாப்ரள யவெள்ளத்திற்காட்டிலும் மும்மடங்கு பெரியதாயிருந்தது என்றதாயிற்று.

‘வையம் ஊடு’ என்று பிரித்து வையத்தினுள் என்னவுமாம்.

 

English Translation

In the yore, the Lord came as a strong man-lion His garlands of flowers and gems swung wildly on either side, his glowing red round eyes came bulging out. The haughty king Hiranya;s reign of terror ended.  The haughty king Hiranya;s reign of terror ended. With sharp curved claws, he tore into the chest of the mighty Asura. The blood that spewed then was three times bigger than the flood the deluge waters! Once the Lord came as a manikin, full all ripe knowlede and Vedic chants and asked for a gift of three strides of land.  Receiving if, he grew, and raised his foot over the seven worlds, up into the sky. The moon stood in praise, the lotus-bord Brahma bowed in obeisance. That Avatara is our protector and king.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain