(1984)

தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் உம்ப ருலகேழி னோடு முடனே,

மாதிர மண்சு மந்து வடகுன்று நின்ற மலையாறும் ஏழு கடலும்

பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,

ஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி அதுனம்மை யாளு மரசே.

 

பதவுரை

தீது அறு

குற்றமற்ற

திங்கள்

சந்திரனும்

பொங்கு சுடர்

தபிகின்ற தேஜஸ்ஸையுடைய ஸூர்யனும்

உம்பா

தேவர்களும்

உம்பர் உலகு எழினோடும் உடனே

மேலுலகங்களேழும்

மாதிரம்

திசைகளும்

மண் சுமந்த வடகுன்று

பூமியைத் தாரிக்கினற மேருபர்வதமும்

நின்ற மலை ஆறும்

மிச்சமான குவபர்வதங்காறும்

ஏழு கடலும்

ஸப்த ஸாகரங்களும்

(ஆகிய இவையெல்லாம்)

புர்தம் அமா

திருவடிகளிலே பொருந்தியுள்ள

சூழ்குளம்பின்

பரம்பியதிருக்குளம்பினுடைய

அகம் மண்டலத்தின்

உள் வலயத்தின்

ஒரு பால்

ஏகதேசத்திலே

ஒடுங்க

அடங்கும்படி

வளர்

வளரா நிற்பவனாய்

சேர்

தகுதியான

ஆதி

காரணபூதனாய்

முன்

வராஹகல்பாதியிலே

ஏனம்

ஆகி மஹாவராஹரூபியாய்

அரண் ஆய

ரக்ஷகனாய் நின்ற

மூர்த்தி அது

அந்த ஸ்வாமியே

நம்மை ஆளும் அரசு

நம்மை அடிமைகொள்ளவல்ல பிரபு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வராஹநாயனாருடைய திருமேனிப் பெருமையை இதில் வருணிக்கிறார். அண்ட பித்தியிற் சார்ந்து கிடந்த பூமிப் பிராட்டியை அதனின்று ஒட்டுவிடுவித் தெடுக்கும்போது மேருமலை முதலிய பெருப் பெருத்த வஸ்துக்களெல்லாம் (வராஹமூர்த்தியின்) குளம்பில் ஒடுங்கிப் போம்படி மிகப் பெரிய வராஹத் திருவுருவெடுத்ததாகப் புராணங்கள் கூறும். பெரிய வடிவகொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான அத் திருவடிக்குப் பர்யாப்தமாயிருந்த பூமியானது வராஹாவதார காலத்தில் எயிற்றின் ஏகதேசத்திலும் அடங்காதிருந்த விசித்திரம் என்கொல்! என்று வியந்துபேசிய “வராகத் தெயிற்றளவு போதாவாறென்கொலோ எந்தை, அடிக்களவு போந்தபடி” என்ற பொய்கையார் பாசுரமுங் காண்க.

சந்திரன் ஸூரியன் முதலிய ஸகல பதார்த்தங்களும் திருவடிக்குளம்பின ஏகதேசத்திலே ஒடுங்கும்படியாக மிக வளர்ந்த வராஹநாயனார் நம்மை ஆளவல்ல பிரபு என்றராயிற்று.

பாதம்+அமர்  ‘பாதம்மர்’ எனச் சந்தியாக வேண்டுமிடத்துப் பாதமர்ஃ; என்றானது தொகுத்தல்.

 

English Translation

In the beginning the Lord came as a boar, and grew big. The spotless Moon, the bright sun, the gods and seven celestial worlds, the eight Quarters, the mount Meru and the other six mountains, the seven oceans, all fitted within the arch of his hoot. That Avatara is our protector and king.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain