(1983)

செருமிகு வாளெ யிற்ற அரவொன்று சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே

வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய,

பருவரை யொன்று நின்று முதுகிற் பரந்து சுழலக் கிடந்து துயிலும்,

அருவரை யன்ன தன் மை அடலாமை யான திருமால் நமக்கொ ரரணே.

 

பதவுரை

செரு மிகு

வலமிக்கதாய்

வாள்

ஒளிபொருந்தியதான

எயிற்ற

பற்களையுடைய

அரவு ஒன்று

வாஸூகி நாகத்தை

சுற்றி

(கடைகயிறாகச்) சுற்றி

திசை

திக்குக்களிலுள்ளாரும்

மண்ணும்

பூமியிலுள்ளாரும்

விண்ணும்

மேலுலகங்களிலுள்ளாரும்

உடனே

ஏகரூபமாக

வெருவர

அஞ்சி நடுங்கும்படியாகவும்

வெள்ளை வெள்ளம் முழுதும்

திருப்பாற்கடலடங்கலும்

குழம்ப

குழம்பாகும்படியாகவும்

இமையோர்கள்

தேவர்கள்

நின்றுகடைய

நின்று கடைவதற்குப் பாங்காக

பரு வரை ஒன்று

பெரியதொரு மலையானது

முதுகில்

தனது முதுகிலே

பரந்து நின்று

பரம்பி நின்று

சுழல

சுழலும்படியாக

கிடந்து

அந்தமலையின் கீழே கிடந்து

துயிலும்

சாய்ந்துகிடவா நின்ற

அருவரை அன்ன தன்மை

பெரியதொரு மலை சாய்ந்து கிடக்கிறாய் போன்றுள்ள

அடல்

வலிமைகொண்ட

ஆமை ஆன

கூர்மரூபியான

திருமால்

எம்பெருமான்

நமக்கு

நமக்கு

ஓர்அரண்

ஒப்பற்ற ரக்ஷகன்.

 

English Translation

Winding the strong white-fanged serpent Vasuki over the huge mountain Mandara, the gods and Asuras churned the white Ocean of Milk, sending waves all around, that frightened Heaven and Earth. The Lord Tirumal then came as a strong tortoise and bore the mountain on his back. That Avatara is our protector and king.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain