(1510)

தெள்ளார் கடல்வாய் விடவாய சினவா ளரவில் துயிலமர்ந்து

துள்ளா வருமான் விழவாளி துரந்தா னிரந்தான் மாவலிமண்

புள்ளார் புறவில் பூங்காவி புலங்கொள் மாதர் கண்காட்ட

நள்ளார் கமலம் முகங்காட்டும் நறையூர் நின்ற நம்பியே.

 

பதவுரை

தெள் ஆர் கடல் வாய்

-

தெளிவுடைய திருப்பாற்கடலில்

விடம் வாய

-

விஷயத்தை உமிழாநின்ற வாயையுடையனாய்

சினம்

-

(பிரதிகூலர்மேல்) சீற்றமுடையனாய்

வாள்

-

ஒளிபொருந்தியவனான

அரவில்

-

திருவனந்தாழ்வான் மீது

துயில் அமர்ந்து

-

சயனித்தருள்பவனும்

துள்ளா வரு

-

(பஞ்சவடியில்) துள்ளிவிளையாடிக்கொண்டு வந்த

மான்

-

(மாரிசனாகிற) மாயா மிருகம்

விழ

-

மாளும் படி

வாளி துரந்தான்

-

அம்பு எய்தவனும்

மாவலி

-

மஹாபலியினிடத்து

மண் இரந்தான்

-

பூமியை யாசித்தவனுமான பெருமான்-

புள் ஆர் புறவில்

-

பட்சிகள் நிறைந்த புறர் சோலைகளிலே

பூ காவி

-

அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்

புலன் கொள் மாதர்

-

அழகிய ஸ்த்ரீகளுடைய

கண்

-

கண்களை

காட்ட

-

காட்டப்பெற்றதும்

நள் ஆர் கமலம்

-

(இதழ்ச்) செறிவையுடைய தாமரைப்பூக்கள்

முகம் காட்டும்

-

(அவர்களது) முகங்களைக் காட்டப் பெற்றதுமான

நறையூர், நின்ற நம்பி-.

-

 

 

English Translation

The Lord of Naraiyur reclines in the ocean on a serpent bed, He did kill the golden deer, he did seek a gift of land.  Birds abound in water tanks, where the red lily looks like the eyes And the lotus looks like the face of the dames around the town.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain