(1516)

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமே லணிந்து,

உடலம் நீறும் பூசி யேறூரும் இறையோன் சென்று குறையிரப்ப

மாறொன் றில்லா வாசநீர் வரைமார் வகலத் தளித்துகந்தான் நாறும்

பொழில்சூழ்ந் தழகாய நறையூர் நின்ற நம்பியே.

 

பதவுரை

ஆறும்

-

(கங்கையாகிற) நதியையும்

பிறையும்

-

சந்திகலையையும்

அரவமும்

-

ஸர்ப்பங்களையும்

அடம்பும்

-

அடப்பம் பூவையும்

சடைமேல் அணிந்து

-

ஜடையின் மீது தரித்துக்கொண்டு

உடலம்

-

உடம்பிலே

நீறும்பூசி

-

சாம்பல் பூசிக்கொண்டு

ஏறு ஊரும்

-

ரிஷபத்தின் மேலேறி நடத்துகின்ற

இறையோன்

-

சிவபிரான்

சென்று

-

வந்துகிட்டி

குறை இரப்ப

-

தனது பிரமஹத்யா சாபம் விடுபடுமாறு பிரார்த்திக்க,

வரை மார்பு அகலத்து ­

-

மலைபோன்ற திரூமார்பிடத்தில் நின்றும்

மாறு ஒன்று இல்லா வாசம்நீர்

-

ஒப்பற்ற பரிமளம் மிக்க (வியர்வை) நீரை

அளித்து

-

எடுத்துக்கொடுத்து

உகந்தான்

-

திருவுள்ளமுவந்த பெருமான்

நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய

-

நறுமணம்மிக்க சோலைகளால் சூழப்பட்ட அழகிய

நறையூர், நின்ற நம்பி -.

 

English Translation

The ash-smeared bull-riding, mat-haire Siva with the Ganga and the cresc on his tuft went abegging with Brahma skull for lbowl, when our Lord rid hil of his curse by filling it with the sap of his heart.  He resides in Naraiyur surrounded by fragrant groves.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain