(1517)

நன்மை யுடைய மறையோர்வாழ் நறையூர் நின்ற நம்பியை

கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் கலிய னொலிசெய் தமிழ்மாலை

பன்னி யுலகில் பாடுவார் பாடு சார பழவினைகள்

மன்னி யுலகம் ஆண்டுபோய் வானோர் வணங்க வாழ்வாரே.

 

பதவுரை

நன்மை உடைய மறையோர் வாழ்

-

விலக்ஷணரான வைதிக ப்ராஹ்மணர்கள் வாழப்பெற்ற

நறையூர்

-

திருநறையூரிலே

நின்ற

-

நித்யவாஸஞ் செய்தருள்நின்ற

நம்பியை

-

எம்பெருமான் விஷயமாக

கன்னி மதிள் வயல் சூழ் மங்கை கலியன்

-

அழிவில்லாத மதிள்களாலும் கழனிகளாலும் சூழப்பட்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்

ஒலி செய்த

-

அருளிச்செய்த

தமிழ் மாலை

-

தமிழ்த்தொடையான இத்திருமொழியை

உலகில் பன்னி பாடுவார்பாடு

-

இவ்விபூதியிலே ஆராய்ந்து பாடுமவர்களிடத்தில்

பழ வினைகள்

-

முன்னைத் தீவினைகள்

சாரா

-

அணுகமாட்டா;  (அன்றியும் அவர்கள்)

மன்னி உலகம் ஆண்டு

-

நெடுநாள் வாழ்ந்திருந்து இவ்வுலகை அரசாட்சி புரிந்து

போய்

-

(பின்பு, பரமபதத்திலே) சென்று

வானோர் வணங்க வாழ்வார்

-

அங்குள்ள நித்யமுக்தர்கள் ஆதரிக்கும்படிவாழப்பெறுவர்.

 

English Translation

This garland of pure Tamil songs by kaliyan, king of walled fertile Mangai tract sings of the Lord of Naraiyur where godly Vedic seers reside.  Those who master it will accrue no karmas.  They will rule the Earth and be worshipped by celestials.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain