ஏழாந் திருமொழி

(391)

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்தஎம் தாச ரதிபோய்

எங்கும் தன்புக ழாவிருந்து அரசாண்ட எம்புரு டோத்தம னிருக்கை

கங்கை கங்கையென்ற வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும்

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(392)

சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்தெழுந் தணவி மணிவண்ண வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்து ழாயும்

கலந்திழி புனலால் புகர்படு கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(393)

அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழிகொண் டெறிந்துஅங்கு

எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம்புரு டோத்தம னிருக்கை

சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி

கதிர்முக மணிகொண் டிழிபுனல் கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(394)

இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந் தெதிர்பொரு சேனை

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம்புரு டோத்தமன் நகர்தான்

இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(395)

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும்

மழுவொடு வாளும் படைக்கல முடைய மால்புரு டோத்தமன் வாழ்வு

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழு தளவினில் எல்லாம்

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(396)

தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல பொழிந்திடக் கண்டு

மலைப்பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால்புரு டோத்தமன் வாழ்வு

அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிர தம்குடைந் தாட

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(397)

விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்தலை சாடி

மற்பொரு தெழப்பாய்ந்து அரையன யுதைத்த மால்புரு டோத்தமன் வாழ்வு

அற்புத முடையஅயி ராவத மதமும் அவரிளம் படியரொண் சாந்தும்

கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(398)

திரைபொரு கடல்சூழ் திண்மதிள் துவரை வேந்துதன் மைத்துனன் மார்க்காய்

அரசினை யவிய அரசினை யருளும் அரிபுரு டோத்தம னமர்வு

நிரைநிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு

கரைபுரை வேள்விப் புகைகமழ் கங்கை கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(399)

வடதிசை மதுரை சாளக்கி ராமம் வைகுந்தம் துவரை அயோத்தி

இடமுடை வதரி யிடவகை யுடைய எம்புரு டோத்தம னிருக்கை

தடவரை யதிரத் தரணிவிண் டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(400)

மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கிமூன் றெழுத்தை

ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன் குடைய எம்புரு டோத்தம னிருக்கை

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

விளக்க உரை

 

(401)

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு டோத்தம னடிமேல்

வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன் விட்டுசித் தன்விருப் புற்று

தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு

கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந் தகணக் காமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain